கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் 2021 டிசம்பர் 31 முதல் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல், ‘ஆப்சென்ட்’ என வருகைப்பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 வாரமாக, ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இதனையொட்டி இந்த மாணவிகள் தங்களை ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கல்லூரி நிர்வாகம் ஏற்கவில்லை. கல்லூரிக்கும் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என ஜனவரி 25 ஆம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
1992 முதல் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஆடைக் குறியீடு தான் பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அண்மையில் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர வேண்டும் என்று கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்திக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். அது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று கல்லூரியின் நிர்வாக செயலாளர் பத்மினி தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான ஆடைக் குறியீடு இருப்பதைக் கட்டாயமாக்க ஒரு குழுவை அமைக்கக் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதுவரை, மாணவர்கள் கல்லூரியின் பழைய விதிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
கல்லூரி வளர்ச்சிக் குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி பட் தலைமையில், கல்லூரி நிர்வாகக் குழு, பெற்றோர், மாணவர் அமைப்பு இணைந்து இந்த அரசாணையைக் கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி இனி ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு எந்த மாணவிகளும் வர முடியாது.
Source : mangalorean
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.