தமிழகத்தில் 100 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கொரோனா தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் 100 சதவீத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, படிப்படியாக ஊரடங்கு தளர்வு கொண்டுவரப்பட்டது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகள் செயல்படலாம் என கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசு நூறு விழுக்காடு இருக்கைகளோடு அறிவிப்பு வெளியிட்டதை ‘கொரானா விதி மீறல்’ என்று மத்திய அரசு உள்துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமைச் செயலருக்கு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு முழு தீர்வு எட்டப்படாத நிலையில் 100% இருக்கை செயல்பட அனுமதி வழங்குவது மத்திய அரசின் பேரிடர் விதிகளுக்கு எதிரானது என்றும் கூறி தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக் குழுக்களும் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி தராததால் அரசாணையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
‘மாஸ்டர்’ படம் வெளியாகுமா? – திரையரங்குகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் சிக்கல்
நீதிபதிகள் எம்எம் சுந்தரேஸ், ஆனந்தி அமர்வில் ஆகியோர் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தற்போது அறிவித்துள்ளார்.
சமீபத்தில், தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர், தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “உள்ளரங்கு, காற்றோட்டம் இல்லாமல் இருப்பது, அதிக நேரம் அந்த ஓரிடத்தில் இருப்பது, கூட்டமாக இருப்பது, கூச்சலிடுவது, பேசுவது, முகக்கவசம் இல்லாமல் இருப்பது போன்றவை, கொரோனா தொற்று நோய் பரவலை மிகவும் ஆபத்தான நிலைக்கே இட்டுச் செல்லும். இது கொரோனா பரவலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்” என்று கூறி அவர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.