Aran Sei

ஸ்டாலினை கேள்வி எழுப்பிய பெண் : திமுக கிராம சபை கூட்டத்தில் நடந்தது என்ன?

திமுக நடத்திய கிராம சபை கூட்டதில் புகுந்து அதிமுகவினர் கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். ’அதிமுகவை  புறக்கணிப்போம்’ என்கின்ற பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுக்க கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார். இன்று கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பெண் ஒருவர் ஸ்டாலினை கேள்வி எழுப்பியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. ஸ்டாலின் அப்பெண்ணை அமைச்ச அமைச்சர் வேலுமணி அனுப்பியதாக குற்றம்சாட்டினார். இதையடுத்த அப்பெண்ணை காவல்துறையினர் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

அப்பெண் அதிமுக அமைச்சர் வேலுமணியிடம் பேசுவதாக ஒரு காணொளி வெளியாகியுள்ளது. அதில் ஸ்டாலின் வருவதை அறிந்து கண்டனம் தெரிவிப்பதற்காக தான் வந்ததாகவும், கொரோனா காலகட்டங்களில் எங்கே போயிருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதாகவும், அதை ஏற்காத திமுகவினர் அப்பெண்ணை அடித்து வெளியேறியதாக அக்காணொளியில் அவர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க மக்கள் கிராம சபை கூட்டத்திற்குள், தி.மு.க தொப்பியுடன் புகுந்த பூங்கொடி என்ற பெண் அ.தி.மு.க மகளிர் பாசறையைச் சேர்ந்தவர் என்பதும், அமைச்சர் வேலுமணியால் அனுப்பப்பட்ட்டவர் என்று திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

’தான் ‘ முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி மட்டும் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்’ – ஸ்டாலின்

இது குறித்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் “ கூட்டத்தை திட்டமிட்டு கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கலவரம் ஏற்படுத்த அமைச்சர் வேலுமணி நினைத்தது தனக்கு முன்னரே தெரியும் என்றுகூறிய அவர். இந்த ஒரு கூட்டத்தை நிறுத்த முயற்சி செய்தால் அதிமுகவினர் எங்கும் கூட்டம் நடத்த முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தொப்பி அணிந்து வந்தவரை தைரியம் இருந்தால் அதிமுக கட்சி  அடையாளத்தோடு வாரவும் என்று சவால் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்