Aran Sei

தமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு

ப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில், 41 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என, ஏபிபி (ABP) – சி வோட்டர் (C-Voter) இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதியும், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு பல்வேறு கட்டமாக மார்ச் மற்றம் ஏப்ரல் மாதங்களிலும் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐந்து  மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, ஏபிபி – சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

பசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது

தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 இடங்களில், திமுகவிற்கு 154 முதல்162 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், அதிமுக 58 முதல் 66 இடங்களைப் பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது. வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணிக்கு 41 சதவீதமும், அதிமுக கூட்டணிக்கு 29 சதவீதமும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்: மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பார் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்தில், திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) 148 -164 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது என்று ஏபிபி-சி-வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. பாஜக 92 – 108 இடங்களைப் பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 31 முதல் 39 இடங்கள் கிடைக்கக்கூடும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்

புதுச்சேரி: யூனியன் பிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. 30 இடங்களில் 17 முதல் 21 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று ஏபிபி-சி-வோட்டர் தெரிவித்துள்ளது. காங்கிரஸ்12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ள என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

கேரளா: இடதுசாரி அரசு, கேரளாவில் ஆட்சியை தக்கவைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) மொத்தம் உள்ள 140 இடங்களில் 83 – 91 இடங்களைப் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 47 முதல் 55 இடங்களுக்கு இடையில் வெற்றி பெறக்கூடும் என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் பாஜக இரண்டு இடங்களில் கூட வெற்றிபெறாது என்றும் ஏபிபி – சி வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்

அசாம்: பாஜக தலைமையிலான கூட்டணி மாநிலத்தில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மாநிலத்தின் 126 இடங்களில் 68 – 76 இடங்களை கைப்பற்றி, 42 சதவீத வாக்குகளைப் பாஜக கூட்டணி பெறும் என்றும், 43 – 51 இடங்களில் வெற்றி பெற்று, 31 சதவீத வாக்குகளை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெறும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மாநிலத்தில் 5 முதல் 10 இடங்களைப் பெறலாம் என்றும் ஏபிபி – சி வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்