Aran Sei

தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – ‘டைம்ஸ் நவ்’ கருத்துக் கணிப்பு முடிவு

மிழகத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், 158 (234 தொகுதிகள்) இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என, டைம்ஸ் நவ் தொலைகாட்சியின் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி vs மு.க.ஸ்டாலின் – ஒரே மேடையில் விவாதம்? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்

அதிமுக – பாஜக கூட்டணி, பலத்த பின்னடைவை சந்திக்கும் என கூறியுள்ள டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு, அந்த கூட்டணி 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தியுங்கள் – மு.க.ஸ்டாலின் தேர்தல் வியூகம்

மேலும், தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்புக்கு தகுதியுள்ளவராக, 38 சதவீத மக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையே தேர்ந்தெடுத்துள்ளதாகவும், 31 சதவீத மக்கள் எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், 7.4 சதவீத மக்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

சீப்பை ஒளித்து வைப்பதால் திருமணத்தை நிறுத்த முடியாது – மு.க.ஸ்டாலின்

இதேபோல், கேரளாவில் இடது முன்னணி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் எனவும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் எனவும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கும் எனவும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்