Aran Sei

‘அதிகார மோகமுள்ள கிரண்பேடியின் காலதாமதமான நீக்கம் பாஜகவின் கபட நாடகம்’ – ஸ்டாலின் விமர்சனம்

ரசியல் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (பிப்ரவரி 17) ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு. அரசியல் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம் – தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

“புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் தடுத்து, ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கி – அம்மாநில மக்களுக்கான நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாமல் முடக்கி வைத்தவர் துணைநிலை ஆளுநர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதலமைச்சராகச் செயல்பட அனுமதித்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப் போட்ட பாஜக. அரசு, தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் அவரை மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம்.” என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரெஞ்ச் காலனிய அரசை விட கிரண் பேடி மோசமாக செயல்படுகிறார் – குடியரசுத் தலைவரிடம் நாராயணசாமி புகார்

மேலும், “புதுச்சேரி மக்களை ஏமாற்றக் கடைசி நேர நடவடிக்கை, இறுதிக் கட்ட முயற்சி இது. துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து பாஜக செய்த தரம் தாழ்ந்த அரசியலையும், அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் புதுச்சேரி மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்