Aran Sei

திமுக, அதிமுக தேர்தல் செலவுகள் – வெளியிட்ட தேர்தல் ஆணையம்

ந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அத்தேர்தல் பிரச்சாரத்திற்காக ரூ.154.28 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, அதிமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ள திராவிட முன்னேற்றக் கழகமானது(திமுக), தமிழ்நாட்டிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் மொத்தமாக 114.14 கோடி ரூபாயை (ரூ .1,14,14,08,525) தேர்தல் பரப்புரைக்காக செலவு செய்துள்ளது என்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு கணக்கு அறிக்கையின் படி தெரியவந்துள்ளது.

பொது மக்கள்களின் பார்வைக்கு இந்த தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

குற்றப்பின்புலம் கொண்டவர்கள் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தை கட்டாயம் கூற வேண்டும் – தேர்தல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது (அதிமுக) தமிழ்நாட்டிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தல் பரப்புரைக்காக ரூ.57.33 கோடி (ரூ. 57,33,86,773) செலவு செய்துள்ளது.

அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் இந்தாண்டு நடைபெற்ற சட்டபேரவை தேர்தல்களில் மொத்தமாக ரூ.84.93 கோடி காங்கிரஸ் கட்சி செலவு செய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச சட்டபேரவை தேர்தல்களின் பரப்புரைக்கு ரூ.13.19 கோடி செலவழித்துள்ளது.

இவற்றில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளானது தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டவை. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டவை.

பாஜக சமர்பித்த தேர்தல் செலவு கணக்கு குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்தில் இணையதளத்தில் இடம்பெறவில்லை.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்