Aran Sei

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்: அடுத்த அரசாங்கம் வரும்வரை வழக்கை முடிக்க கூடாது – ஊழல் ஒழிப்பு இயக்குனரை வலியுறுத்திய ஆர்.எஸ்.பாரதி

மிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் தொடர்பான அனைத்து புகார்களையும் முடித்து வைப்பதற்கான முயற்சிகளை லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குனரகம் செய்து வருகிறது என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று (ஏப்ரல் 15), லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குனரத்தின் இயக்குனருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் ஊழல் உச்சத்தை தொட்டுள்ளது. முதல்வர் உட்பட அவரின் அமைச்சரவையில் உள்ள யார் ஊழல் குற்றம் புரிந்திருந்தாலும், அவர்களுக்குத் தக்க தண்டனையைப் பெற்றுத்தருவோம் என்று தமிழக மக்களிடம் திமுக உறுதியளித்துள்ளது.” என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

‘ஆளுங்கட்சி செய்த ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்’ – தமிழக ஆளுநரிடம் புகாரளித்த திமுக

“முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் தொடர்பான அனைத்து புகார்களையும் முடித்து வைப்பதற்கான முயற்சிகளை லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குனரகம் செய்து வருகிறது என்று அறிகிறோம்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் அடுத்த அரசாங்கம் பதவியேற்கும் வரை, இந்த புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், இதுதொடர்பாக, ஆளும் அதிமுக அரசு தரும் எந்த அழுத்தத்தையும் பொருட்படுத்த கூடாது என்றும் ஆர்.எஸ்.பாரதி தன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்