Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய சட்டம் நிறைவேற்றப்படும் : திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை

ந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு கழகம் அழுத்தமான குரல் கொடுக்கும் எனவும் திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையைத் திருத்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி,   திமுக  தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் 500 திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

அந்த அறிக்கையில், ”இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் நான்காவது நாடாக இலங்கையையும் இணைத்து, இந்திய முகாம்களில் உள்ள நாடற்ற இலங்கை தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசு வலியுறுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், அதற்கு மாறான நிலைப்பாட்டை திமுக,  எடுத்தது, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம், அந்த வாக்குறுதியைத் திருத்தி வெளியிட்டுள்ள திமுக, “இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், ”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு கழகம் அழுத்தமான குரல் கொடுக்கும்” என்றும் கூறியுள்ளது

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்