Aran Sei

தமிழகத் தேர்தல் – தபால் வாக்கு எண்ணிக்கை: திமுக முன்னிலை

மிழக சட்டபேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதலில் எண்ணத்தொடங்கப்பட்ட   தபால் வாக்குகளில், திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் உள்ள 234 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 2) காலை 8 மணிக்கு, தமிழகம் முழுவதும் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணத்தொடங்கப்பட்டுள்ளன. அதில், திமுக முன்னணிலை வகிக்கிறது.

மக்கள் யார் பக்கம் – தொடங்கியது தமிழக சட்டபேரவை வாக்கு எண்ணிக்கை

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக 174 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 60 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்