Aran Sei

2015 பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: செங்கல்லை கூட வைக்காத மத்திய அரசு – பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம்

2015 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது வெளியான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 6 ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இன்று (ஜனவரி 2) இவ்வாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. கூட்டம் தொடங்கியவுடன் ஆளுநருடன் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, ” இந்த பட்ஜெட் மத்திய அரசு தமிழ்நாட்டுக்குக் கொடுத்திருக்கும் லாலிபாப்தான் . 2015 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் அடுத்து, 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி, மதுரைக்கே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டு விழா நடத்தி, நாடகத்தை நடத்திவிட்டுச் சென்றார். ஆனால் இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

’பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்கி, அவற்றை தனியார்மயமாக்கும் மத்திய அரசு’ – பட்ஜட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்

“பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் விலைவாசியும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கோ, தமிழக மக்களுக்கோ அல்லாமல் கார்ப்பரேட்டுகளுக்காக மத்திய அரசு பட்ஜெட் போட்டுள்ளது. ஆளுநர் இன்று ஒரேயொரு உண்மையை மட்டும் பேசினார். இந்த அரசின் கடைசி பட்ஜெட் இது என்று தெரிவித்தார். அதை மட்டும் வரவேற்கிறேன்.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆளுநர் உரையைப் புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளது. ஏனெனில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி அதிமுக அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல்கள் குறித்து, ஆதாரங்களைத் திரட்டி ஆளுநரிடம் புகார் கொடுத்தோம். ஆனால், அதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலுக்குத் துணை நிற்கும் வகையில் ஆளுநர் இருக்கிறார். எழுவர் விடுதலை தொடர்பாகவும் அவர் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.” என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

’ஒருபக்கம் சுயசார்பு இந்தியா; மறுபக்கம் அந்நிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம்’ – பட்ஜெட் குறித்து முத்தரசன்

“இவை அனைத்தையும் கண்டித்து ஒட்டுமொத்தக் கூட்டத்தொடரையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் கொள்ளையடித்துள்ள பணத்தைக் கொண்டு ஓராண்டுக்கான பட்ஜெட்டைப் போட்டுவிடலாம். இவற்றை எல்லாம் சட்டப்பேரவையில் பேசுவதற்குப் பதிலாக மக்கள் மன்றத்தில் பேச முடிவு எடுத்துவிட்டோம்.” என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்