Aran Sei

‘உங்கள் பரப்புரையால் பெருவெற்றி பெறுவோம்’: பிரதமருக்கு அழைப்புவிடுத்த திமுக கூட்டணி வேட்பாளர்கள்

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தங்கள் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு திமுக கூட்டணி வேட்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், தங்களின் பரப்புரையால் நாங்கள் பெருவாரியான  வெற்றியைப் பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று (ஏப்ரல் 2) இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு, “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, தயவு செய்து திருவண்ணாமலை தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளுங்கள். நான் அத்தொகுதியின் திமுக வேட்பாளர். உங்களின் வருகை எனக்குப் பெருவாரியான  வெற்றியைப் பெற்றுத் தரும். நன்றி சார்.” என்று தெரிவித்துள்ளார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் செல்வபெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, தயவு செய்து கே.பழனிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளுங்கள். நான் அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர். உங்களின் வருகை எனக்குப் பெருவாரியான  வெற்றியைப் பெற்றுத் தரும். நன்றி சார்.” என்று கூறியுள்ளார்.

’பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அறிவித்த நாளே, எங்கள் வெற்றி உறுதியாகி விட்டது’ – ப.சிதம்பரம்

இவர்களைப் போன்றே, திமுக வேட்பாளர்களான காஞ்சிபுரம் தொகுதி எழிலரசன், திருச்சூழி தொகுதி தங்கம் தென்னரசு, கரூர் கிருஷ்ணராயபுரம் தொகுதி சிவகாமசுந்தரி, ராணிப்பேட்டை தொகுதி ஆர்.காந்தி, உத்திரமேரூர் தொகுதி க.சுந்தர், கோபி செட்டிப்பாளையம் தொகுதி வெங்கிடு மணிமாறன், தாராபுரம் தொகுதி கயல்விழி செல்வராஜ், முதுகுளத்தூர் தொகுதி ராஜகண்ணப்பன், வந்தவாசி தொகுதி அம்பேத் குமார், தாம்பரம் தொகுதி ஆர்.பாபு, திருச்செந்தூர் தொகுதி அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர்  மோடிக்கு அழைப்புவிடுத்துள்ளார்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்