Aran Sei

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜகவுக்கு தொடர்ந்து பின்னடைவு – திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் முன்னிலை

யிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் 9371 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலனும், பாஜக சார்பில் திரைக்கலைஞர் குஷ்பூவும் முக்கிய வேட்பாளராக களம் காண்கிறார்கள்.

கொரோனா தொற்றால் 1400 பேர் உயிரிழப்பு – பெங்களூருவில் நிறைந்து வழியும் பிணவறைகள்

இந்நிலையில் மருத்துவர் எழிலன் திரைக்கலைஞர் குஷ்பூவை விட 9371 வாக்குகள் கூடுதலாக பெற்று 17,356 வாக்குகளோடு முன்னணியில் உள்ளார்.

நடிகை திரைக்கலைஞர் தற்போது வரை 7,985 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்தத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து திரைக்கலைஞர்  குஷ்பூவை விட திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் முன்னிலை வகிக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்