Aran Sei

மோடி அரசின் கொள்கைகளை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் – தமிழகம் முழுதும் நடைபெற்றது

பாஜக அரசினைக்  கண்டித்து  திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடியேந்தி போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளன.

கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 10 நாட்களுக்குப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன.

 

அந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில்: “நமது மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசினை  பாதுகாக்கும் வகையில் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய மக்கள்  எழுச்சியுற வேண்டும்” என்றும்,  செப்டம்பர் 2௦ முதல் 3௦ வரை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இன்று வீடுகள் முன்பும், கட்சிகளின் தலைமையிடம் முன்பும் கறுப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

புறவாசல் வழியே கல்விச் சேர்க்கை நடைபெறுவதை தடுக்க வேண்டும் – டெல்லி உயர்நீதி மன்றம்

அதன்படி, ஒன்றிய அரசு கொண்டுவந்த  வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “இல்லந்தோறும் #கருப்புக்கொடி ஏந்துவோம்! மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளையும் சட்டங்களையும் எதிர்ப்போம்! பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்துசெய்யக் குரல் கொடுப்போம்! நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்துவோம்” என்றும் கூறியுள்ளார். 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்