Aran Sei

திட்டமிட்டு ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்கிய சத்தீஸ்கர் அரசு – சுயத்தேவையை பூர்த்தி செய்து பிற மாநிலங்களுக்கும் விநியோகம்

த்தீஸ்கர் மாநிலத்தில்,  மாவட்ட அளவில் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டதன் மூலம், மாநில தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு பிற மாநிலங்களுக்கு அவசர நேரத்தில் ஆக்சிஜனை அம்மாநில அரசு வழங்கி வருகிறது.

கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்த ஆக்சிஜனை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களுக்குக் கண்டெய்னர்கள் மூலம் சத்தீஸ்கர் அரசு அனுப்பி வருகிறது.

”காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டதன் பெயரில், உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மெதந்தா மருத்துவமனைக்கு 16 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது” என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பெகல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் – வைகோ கோரிக்கை

சத்தீஸ்கரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை எனக் கூறிய அவர், “ஆக்சிஜனை நாங்கள் சரியாக நிர்வகிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

”எங்களுக்கு ஆக்சிஜன் தேவை இல்லாமல் இல்லை. மார்ச் மாதம் நாளொன்றுக்கு 3 மெட்ரிக் டன்னாக இருந்த ஆக்சிஜன் பயன்பாடு, ஏப்ரல் 20 ஆம் தேதி 170 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. எங்களுக்கு அன்றைய தேவைக்குப் போதுமான ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்தபிறகு எஞ்சியதை சேமித்து வைப்போம். அவ்வாறு சேமித்து வைத்தது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.” என ஆக்சிஜன் மேலாண்மை குறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரின் ஒருநாள் ஆக்சிஜன் தேவை 170 மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில், நாளொன்றுக்கு 388 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

”விலை அதிகரிப்பு, போக்குவரத்து பிரச்னைகள் ஆகியவற்றை சமாளிக்க மாவட்ட அளவில் சிறிய அளவிலான ஆக்ஸிசன் உற்பத்தி நிலையங்களை நிறுவி, செப்டம்பர் மாதம் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டு, நவம்பரில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது” என சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டி.எஸ். சிங் தியோ தெரிவித்துள்ளார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்