Aran Sei

ராகுல் காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – காங்கிரஸ் கட்சி

Credit: The Telegraph India

ராகுல் காந்தி பேசிய காணொளியை திரித்து வெளியிட்டதற்காக பாஜக தலைவர்கள் மன்னிப்பு கோராவிட்டால் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கேரளாவின் வயநாட்டில் பேசிய ராகுல் காந்தி, அவரது நாடாளுமன்ற அலுவலகத்தை சேதப்படுத்திய எஸ்.எஃப்.ஐ அமைப்பினரை குழந்தைகள் என்று கூறியதை, அவர் உதய்பூர் கொலை வழக்கில் குற்றம் சாட்டியவர்களை கூறியதாக திரித்துக் கூறப்பட்டது.

ஜீ தொலைக்காட்சி காட்டிய இந்த போலிச் செய்தியை பாஜக பிரமுகர்கள் அவர்களது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்தனர்.

உதய்பூர் படுகொலை: மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது – ராகுல் காந்தி கண்டனம்

ராகுல் காந்தி பேசிய முழு காணொளியை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கோரா, சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஸ்ரீனாட், ஆகியோர் வெளியிட்டனர். திரிக்கப்பட்ட காணொளிகளை பகிர்ந்தவர்கள் மன்னிப்பு கோராவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த திரிக்கப்பட்ட காணொளியை ஜீ டிவி நிக்கிவிட்டது. மேலும், சம்பந்தப்பட்ட பதிவை ஜீ டிவியின் தொகுப்பாளரும் அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

மேலும், திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்தது தொடர்பாக பாஜக தேசிய தலைவருக்கு ஜே.பி. நட்டாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு அணித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

புதிய இந்தியாவில் மோடி நண்பர்களின் குரல் மட்டுமே கேட்கும்; தேசத்தின் நாயகர்கள் குரல் அல்ல – ராகுல் காந்தி விமர்சன

அதில், “சமூக வலைதளங்களில் இது போன்ற அப்பட்டமான பொறுப்பற்ற மற்றும் கிரிமினல் முறையில் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கோராவிட்டால், பாஜக மற்றும் அதன் பிரமுகர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், ”பொய்களும் அவதூறு பிரச்சாரமும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் அடித்தளமாகும். நாட்டை வெறுப்பு நரகத்திற்குள் தள்ளுவதன் மூலம் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்பார்க்கும் அர்.எஸ்.எஸ் – பாஜகவின் வரலாறு, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தெரியும். இந்த தேச விரோதிகள் நாட்டை உடைக்க விரும்புவதைச் செய்யட்டும், காங்கிரஸ் எப்போதும் நாட்டை ஒன்றிணைக்க பாடுபடும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Source: The Telegraph India

Udaipur சம்பவமும் BJP – RSS ன் சதி திட்டமும் | Vanchinathan | BJP Udaipur Tailor Kanhaiya Lal Video

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்