ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று (26.11.21) இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்த இடத்திற்கு அருகே கூடிய இந்துத்துவாவினர், 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை நிகழ்ச்சியை நடத்தியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
குருகிராம் செக்டர் 37 பகுதியில், வழக்கமாக இஸ்ஸாமியர்கள் தொழுகை நடத்தும் காலி மனையில் தொழுகை நடந்துகொண்டிருந்தபோதே அதற்கு வெகு அருகில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு பிரார்த்தனை கூட்டத்தை நடத்தியவர்கள், “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் “பாரத் மாதாகி ஜெ” முழக்கங்களை எழுப்பியதாக தி இந்து கூறுகிறது.
இதுகுறித்து தி இந்து -விடம் பேசியுள்ள குருகிராம் முஸ்லீம் கவுன்சில் அமைப்பின் தலைவர் அல்தாஃப் அகமது, அரசியல்சாசன தினத்தன்றே அரசியல்சான பிரிவு 25 மீறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். “தீவிர வலதுசாரி அமைப்புகள் கடந்து மூன்று மாதங்களாக குருகிராம் பகுதியில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு இடையூறு செய்துவருகின்றனர். இந்த வெள்ளிக்கிழமை வேண்டுமென்றே, செக்டர் 37 பகுதியில் இஸ்லாமியர்கள் வழக்கமாக தொழுகை நடத்தும் இடத்தை, தங்கள் பிரார்த்தனை கூட்டத்தை நடத்த தேர்வுசெய்துள்ளனர். இதேபோல்தான் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி ‘செக்டர் 12A’ என்ற இடத்தில் கோவர்த்தன் பூஜை நடத்தினர்” என்று அல்தாஃப் அகமது கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
குருகிராமில் செயல்படும் பல்வேறு நிறுனவங்களில் வேலை செய்யும் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், வெள்ளிக்கிழமைகளில் வழக்கமாக தொழுகையில் கலந்துகொள்ள இந்த இடத்திற்கு வருவார்கள் என்றும், நேற்று (26.11.21) முப்பதுக்கும் குறைவானர்களே வந்ததாகவும் அல்தாஃப் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இதுபோன்ற நிகழ்வு முதன் முதலில் செக்டர் 39 பகுதியில் தொடங்கியதாகவும், தற்போது அது ஆறுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு பரவியுள்ளதாகவும் தி இந்து கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.