நகர்ப்புற குடிசைப் பகுதி மக்களை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட சேவ் தி சில்ட்ரன், இந்தியா அமைப்பின் ஆய்வில், பெண் குழந்தைகளின் மீது கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மகாராஷ்ட்ரா, பீகார், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள நகர்ப்புற குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 1,092 தாய்மார்கள் மற்றும் 10 வயது தொடங்கி 18 வயதுக்குட்பட்ட 1,092 சிறுமிகளிடம் ஆய்வு நடத்தி, தி வேர்ல்ட் ஆஃப் இந்தியாஸ் கேர்ள்ஸ்: விங்ஸ் 2022 என்ற பெயரில் இவ்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
“கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தின் போது சுமார் 68 விழுக்காடு இளம்பெண்கள் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் கிடைக்கப்பெறுவதில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். அதே நேரத்தில் 67 விழுக்காடு பேர் இணைய வழி வகுப்புகளுக்குச் செல்லவில்லை. 56 விழுக்காடு பேருக்கு வெளியில் சென்று பொழுதுபோக்குகளில் ஈடுபட நேரம் கிடைக்கவில்லை” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“பெருந்தொற்று காலத்தில் ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இளம்பெண்கள் அடிப்படை சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை இழந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இளம்பெண்களுக்கு உடல்நலம், கல்வி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதில் உள்ள சிக்கல்களில் ஆய்வு முக்கிய கவனம் செலுத்தியதாக வ் தி சில்ட்ரன், இந்தியா அமைப்பு கூறியுள்ளது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.