Aran Sei

‘பிராமணர்களுக்கு எதிரான தமிழக அரசை கலைக்க வேண்டும்’ – ஆளுநருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்

credits : india tv

தமிழகத்தில் பிராமணர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தமிழக ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரோகித்திற்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ”சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட  மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கத்தின் நடைமுறை மற்றும் உள்ளார்ந்த ஆதரவினால் தமிழ்நாட்டில் நிலவும் பதட்டத்தின் தற்போதைய நிலைமைகுறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வர நான் இன்று  இதை  எழுதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

காசா தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

”இன்று தமிழ்நாட்டில் பிராமணர்களை இலக்கு வைத்து, இந்த மோசமான ஒழுங்கற்ற சமூகத்தை வாய்மொழியாக பயமுறுத்துவது, ஜெர்மனி அடால்ஃப் ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் நடந்தது போலவே உள்ளது.” என குற்றம் சாட்டியுள்ளார்.

”ஆசிரியர்கள், பூஜாரிகள் பிராமணர்களாக இருப்பதால், அவர்கள் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டுள்ளனர் என  தமிழ்நாட்டில் வாழ்பவர்களிடமிருந்து எனக்குத் தகவல்கள் வருகின்றன.” என சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்

”திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆதரவு குழுவினரால் தமிழ்நாட்டில் பதற்றம் நிலவுகிறது. எனவே, தற்போதைய தமிழ்நாட்டில் ஆளுநர் என்ற முறையில் நீங்கள் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வது முக்கியம்.” என கேட்டுக் கொண்டுள்ளார்.

”தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதால், தற்போதையை நிலைமைக்குப் பொருந்தும் இந்திய அரசியலமைப்பு  356வது பிரிவைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கக் கூறுவது முக்கிரமான ஒன்றாக உள்ளது. ” என சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

‘ஆக்சிஜனுக்கே போராடுகையில் கொரோனா மருந்துக்கு ஜிஎஸ்டி விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல்’ – பிரியங்கா காந்தி கண்டனம்

”மேலும், இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம். இதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளரை அழைத்து, பிராமண சமூகத்தின் பாதுகாப்பற்ற பிரிவினருக்கு ஏற்படும் துன்பங்கள் தொடர்பான அனைத்து குறைகளையும் அறிக்கையாக  தயாரிக்க கோருமாறு கேட்டுக் கொள்கிறேன். அதன் பின்னர்,  பொருத்தமான நடவடிக்கை என்று கருதுவதை நீங்கள் கருந்து நடவடிக்கை எடுக்கலாம்.” என மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்