Aran Sei

தீஷா ரவிக்கு 3 நாட்கள் நீதிமன்ற காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டூல்கிட் வழக்கில் கைது செய்யபட்டிருக்கும் 22 வயதான தீஷா ரவிக்கு, 3 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீஷா ரவியை டெல்லி காவல்துறை விசாரிக்க வழங்கப்பட்டிருந்த 5 நாட்கள் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, மூன்று நாள் நீதிமன்ற காவலில் வைக்க, கூடுதல் தலைமை  நீதிபதி ஆகாஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

தீஷா ரவியை போலீஸ் காவலில் எடுக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு முலுக் ஆகியோரை விசாரிக்கும்போது தான், தீஷா ரவிக்கு போலீஸ் காவல் தேவை என, டெல்லி காவல்துறை கூறியதை அடுத்து, அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த காவல்துறைக்கு உரிமை உண்டு – தீஷா ரவி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

தீஷா ரவி விசாரணையைத் தவிர்க்க முயன்றதோடு, பழியை பிறர் மீது  திருப்ப முயல்வதாகவும் டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சாந்தனு முலுக், நிகிதா ஜேக்கப் ஆகியோர் விசாரணை அமைப்பின் முன்பு, பிப்ரவரி 22 ஆம் தேதி ஆஜராகுமாறு கோரிப்பட்டிருப்பதாக, நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

‘கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற பொய்யை குழித்தோண்டிப் புதைப்போம்’ – ஸ்டாலின்

காவல்துறையின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தீஷா ரவியின் வழக்கறிஞர், ”வழக்கு ஆவணங்கள் சரியாக இல்லை. தீஷா ரவியை போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவலில் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

அரசிற்கு எதிரான சதித்திட்டம் மற்றும் காலிஸ்தான் இயக்கத்தில் பங்கு தொடர்பாக விசாரிக்க, 5 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பபட்டிருந்த தீஷா ரவி தாக்கல் செய்திருக்கும் ஜாமீன் மனு, சனிக்கிழமை (பிப்ரவரி 20) விசாரணைக்கு வரவுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்