Aran Sei

தீஷா ரவி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்காத ஒன்றிய அரசு – உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

Image Credit : scroll.in

சூழலியல் செயற்பட்டாளர் தீஷா ரவி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்காத ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தீஷா ரவி சம்பந்தப்பட்ட டூல் கிட்(Tool kit) தயார் செய்த வழக்கு சம்பந்தப்பட்ட எந்த ஆவணத்தையும் காவல்துறை ஊடகங்களுக்குக் கசியவிடாமல் கட்டுபடுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திவரும் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் – சர்வதேச நீதிமன்றத்திற்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்

தீஷா ரவி தாக்கல் அந்த மனுவில், “வாட் சப்  செயலி உள்ளிட்ட வழியிலான தனது தனிப்பட்ட மற்றும் மூன்றாம் நபருக்கிடையிலான  உரையாடல்களை ஊடகங்கள் வெளியிடுவதைக் கட்டுபடுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து பதிலளிக்க இறுதியாகக் கடந்த மார்ச் 17 வரை உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்குக் கால அவகாசம் கொடுத்திருந்தது  கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரேகா பள்ளி, “இந்திய ஒன்றியத்திற்கு கடைசி மற்றும் இறுதி வாய்ப்பென்பதே இல்லையா? இது மிகவும் மோசமானது. அப்படியென்றால் இறுதிவாய்ப்பு என்பதற்கான அர்த்தமென்ன? நீதிமன்றம் இறுதி மற்றும் கடைசி வாய்ப்பு என்று  கூறியதற்கான மதிப்பு என்ன? எனக்குப் புரியவில்லை” என்று கூறியுள்ளார்.

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

இதைத்தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு மேலும் ஆறு வாரகாலம் வழங்கியதோடு மட்டுமல்லாது, வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிராக விவசாயிகள் போராட்டும் தொடர்பாக டூல்கிட் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த பிப்ரவரி 13 ஆம் நாள் தீஷா ரவியை டெல்லிக் காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்