Aran Sei

இந்தியாவில் ஃபைசர் தடுப்பு மருந்து – அனுமதிக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ஆல்பர்ட் போர்லா தகவல்

ஃபைசர் (Pfizer) தடுப்பு மருந்தைக் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பு மருந்து  விற்பனைக்கு ராயல்டி கிடைக்கும் – இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தகவல்

இதுகுறித்து ஃபைசர் நிறுவனத்தின இயக்குனர் ஆல்பர்ட் போர்லா, “எங்கள் தடுப்பூசி இந்தியாவில் பதியப்படவில்லை. அதற்கான அறிக்கையை சில மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்தோம், தற்போது இந்தியாவில் பயன்படுத்த அனுமதி பெறுவது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவினால் இந்தியா கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் தொடர்ந்து கவனித்து வருகிறோம். எங்களால் முடிந்த ஆதரவுகளை வழங்குவோம்” என்றும் ஆல்பர்ட் போர்லா கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெம்தேசிவிர் தடுப்பு மருந்தை உள்நாட்டு சந்தையில் விற்க அனுமதி வழங்கவேண்டும்- உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

இந்தியாவில் தற்போது வரை கோவாக்சின், கோவிஷில்ட் இரண்டு தடுப்பு மருந்துகள் கொரோனா தடுப்பு மருந்தாக  பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துக்கும் ஏற்கனவே  இந்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

ஃபைசர் தடுப்பு மருந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்