Aran Sei

இயக்குனர் தாமிரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார் – போய் வாருங்கள் ஆண் தேவதையே

கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக சிகிச்சைபெற்று வந்த இயக்குனர் தாமிரா இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இயக்குனர் தாமிரா ஆண் தேவதை, ரெட்டச்சுழி ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாண்டவ் வெப் சீரிஸ் விவகாரம்: இந்து மதத்தை இழிவு செய்வதா? – நீதிபதி கடும் கண்டனம்

கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார்.

அவர் இயக்கிய ரெட்டச்சுழி படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இருவரையும் நடிக்கவைத்து அந்த படத்தை இயக்கிருந்தார்.

இதேபோன்று, சமுத்திரக்கனி, ரம்யாபாண்டியன் நடிப்பில் உருவான ஆண் தேவதை திரைப்படம் மூன்று முறை முறையான திரையரங்குகள் கிடைக்காமல் வெளியாகும் தேதி தள்ளிப்போன நிலையில், இயக்குனர் தாமிராவின் கடும் முயற்சிக்கு பின் கடந்த 2018 ஆம் வெளியானது.

தீஷா ரவி கைது: ’டெல்லி காவல்துறையின் அசிங்கமான நடவடிக்கை’ – நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்

மேலும் திரைப்படம் தாண்டி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களில் முன்னின்றவர்.

இயக்குனர் தாமிராவின் மறைவு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள பதிவில், “கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டம் நடந்த காலத்தில் இருந்தே எங்களுடன் துணை நின்ற இயக்குனர் தாமிரா அவர்கள். கொரோனா தொற்றால் இறந்தார் என்கிற செய்தி கவலையளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளது.

நடிகை பார்வதி நடித்த படத்தில் ‘தேசவிரோத கருத்துகள்’ – திரையிட மறுத்த தணிக்கை வாரியம்

அவரது மறைவு குறித்து இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில், “நண்பர் தாமிரா… இரட்டைச்சுழி, ஆண்தேவதை படத்தின் இயக்குனர்… கொரோனா பாதிப்பின் காரணமாக பிரிந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா அமைதி கொள்ளவேண்டும்.. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்கள்”. என்றும் தெரிவித்துள்ளார்.

கலையின் மீதும், சமூகத்தின் மீதும் நுண்மையான உணர்வு கொண்ட ஆண்தேவதை நம்மிடம் இருந்து விடைபெற்றுள்ளார்… போய் வாருங்கள் தாமிரா!

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்