ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது.
இது குறித்து, நேற்று(ஜனவரி 27), ஒன்றிய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்) செயலாளர் துஹின் காந்தா பாண்டே செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாலேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஏர் இந்தியா ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது, ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய உரிமையாளர் டாலேஸ்” என்று அறிவித்துள்ளார்.
#FlyAI : Air India Limited, Air India Express & AISATS (AI stake) have become part of the Tata Group today.
Senior Officials of @TataCompanies , @SecyDIPAM and @MoCA_GoI met at Airlines House New Delhi. pic.twitter.com/HA4aEkVwWX
— Air India (@airindiain) January 27, 2022
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறுகையில், “ஏர் இந்தியாவை கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஏர் இந்தியாவை மீண்டும் டாடா பெற்றிருப்பதில் டாடா குழுமம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது” என்று தெரிவித்துள்ளார்.
“உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை உருவாக்க அனைவருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலாகவுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாலேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு விற்றது.
Source: PTI
தொடர்புடைய பதிவுகள்:
‘ஏர் இந்தியா தனியாருக்கு விற்கப்பட்டது அரசின் அர்ப்பணிப்பை காட்டுகிறது’- பிரதமர் மோடி
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.