Aran Sei

உணவு விடுதிகள் மூடப்பட்டதன் எதிரோலி – சிங்கு எல்லையில் போராட்டத்தை உயிர்ப்புடன் வைக்க திரளும் பெண்கள்

விவசாயிகள் போராட்டதிற்கு நன்கொடைகள் திரட்டவும், லங்கர்(உணவு பந்தி) சேவை வழங்கவும், பஞ்சாப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகள், சிங்கு எல்லைக்குத் திரண்டு வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

குடியரசு தினத்தன்று, செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிறகு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டவந்த நன்கொடைகள் குறைந்ததோடு, சில உணவு விடுதிகள் மூடப்பட்டதையடுத்து, பெண்கள் சிங்கு எல்லையில் கூடி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 9 ஆம் தேதி, ஜலந்தர் பகுதியிலிருந்து போராட்டக் களத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான பெண்கள், நாடாளுமன்றத்தில் மோடி ஆற்றிய உரையைக் கேட்டப்பின், ”கிளர்ந்துள்ளோம்” என்றும், போராட்டத்தை ”உயிர்ப்புடன்” வைக்க விரும்புகிறோம் எனக் கூறியதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்த விண்கலம் – வரலாறுபடைத்த ஐக்கிய அரபு அமீரகம்

ஜலந்தரிலிருந்து 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் டிராக்டரில் வந்திருந்த 45 வயதான மல்கித் கவுர், அவரது கணவர் இரண்டு மாதமாக, சிங்கு எல்லையில் போராடி வருகிறார் என்றும் அவர் கிராமத்திற்கு திரும்பி விவசாயத்தை கவனித்து கொள்ள வரும்புகிறேன் எனத் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நாங்கள் இங்கு இருக்கிறோம் எனப் பிரதமருக்குக் காட்ட விரும்புகிறேன். அவர், எங்களை என்ன பெயர் வைத்து வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளட்டும், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேறமாட்டோம். நன்கொடைகள் குறைந்து விட்டது என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, அதனால் நாங்கள் 50 குவிண்டால் கோதுமை மாவை கொண்டு வந்திருக்கிறோம். ஒவ்வொரு லங்கருக்கும் நாங்கள் இரண்டு குவிண்டால் கோதுமை மாவை வழங்கியிருக்கிறோம். அடுத்த வாரம் எங்கள் குடும்பத்தினர் இன்னும் கோதுமை மாவுகளை கொண்டு வருவார்கள்” என மல்கித் கவுர், தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய துறைமுக ஆணைய மசோதா: உங்கள் நண்பரிடம் இந்தியாவின் சொத்தை கொடுக்க போகிறீர்களா? – காங்கிரஸ் கேள்வி

எங்கள் குடும்பத்தினர் கிராமங்களுக்குத் திரும்பி, அங்கிருக்கும் விவசாயிகளிடம் காய்கறிகள் மற்றும் நன்கொடைகள் கோருவாரெனக் கவுர் கூறியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜலந்தரிலிருந்து வந்திருக்கும் மற்றுமொரு விவசாயியான 50 வயதான ஜஸ்விந்தர் கவுர், ”நான் என் மகன் மற்றும் கணவனைக் கிராமத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளேன். அவர்கள் அங்கிருக்கும் மக்களுடன் பேசி, இங்கு வரவழைத்து நன்கொடை வழங்கப் பேசுவார்கள். அரசாங்கம் எங்கள் போராட்டத்தை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், எங்கள் பிரச்னைகளைப் புறிக்கணிக்கவே முயற்சிப்பதாக நாங்கள் நினைக்கிறோம்” எனத் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

எழுவர் விடுதலை: ‘கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய கோருவது நியாயம் இல்லை; விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சி வென்றதில்லை’ – காங்கிரஸ்

மக்காச்சோளத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டாலுக்கு ரூ. 1800 ஆக இருக்கும் நிலையில், மண்டிகள் மூலம் குவிண்டாலுக்கு ரூ. 800 முதல் 1000 வரையே கிடைக்கிறது என விவசாயிகள் குற்றம்சாட்டுவதாகவும், “குறைந்தபட்ச ஆதரவு விலை எப்படி எங்களுக்குப் பயனிளிக்கும்? எங்கள் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்” என ஜஸ்விந்தர் கூறியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜலந்தரிலிருந்து வந்திருந்த பெண் விவசாயிகள், தங்களை வயல்வெளிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக, பச்சை நிற உடை மற்றும் பச்சை நிற சால்வை அணிந்திருந்ததாக, அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’ஏர் கலப்பை சுமக்கும் விவசாயிகளும்; கார்ப்பரேட்டுகளுக்கு பல்லாக்கு சுமக்கும் மத்திய அரசும்’ – சு.வெங்கடேசன் கண்டனம்

மனைவி, மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் போராட்டக்களத்திற்கு வந்துள்ள பில்லாவூர் மாவட்டம், கடியானா கிராமத்தைச் சேர்ந்த 80 வயதான ஹர்பந்த் சிங், 80 குவிண்டால் எடை கொண்ட தண்ணீரை, அவர்களது குடும்பம் கொண்டு வந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்டம்  கூறியுள்ளார்.

”போராட்டத்திற்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்ய விரும்புகிறோம். குடியரசு தின நிகழ்வு எங்களுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும்,  நாங்கள் பலமடைந்திருக்கிறோம். மத்திய அரசு இன்னும் எங்களின் பேச்சைக் கேட்கவில்லை” என ஹர்பந்த் சிங் கூறியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாஹீத் பகத் சிங்கிற்கு மரியாதை செய்யும் விதமாக மஞ்சள் நிற உடையில் 70 – 80 பெண்கள், பஞ்சாபின் நவான்ஷஹரிலிருந்து வந்திருந்ததாகவும், அதில் 50 வயதை சேர்ந்த ராமன்ஜீத் என்ற கரும்பு வியாபாரி, ”போராட்டத்திற்கு நிதியளிக்க எனது மகன்களிடம் நான் கேட்டுள்ளேன். என் மகன்களில் ஒருவர் மும்பையில் பொறியாளராக உள்ளார். நான் இங்கு வந்ததும் எனக்கு வாழ்த்துகள் கூறினார். எங்கள் நிலங்களை, என் கணவர் மட்டுமே தனியாகக் கவனித்து கொள்கிறார்” எனத் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு அடிபணிந்த ட்விட்டர் நிறுவனம் – 500 க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

நன்கொடைகள்குறித்து கேட்டதற்கு பதிலளித்த சம்யுக்ட் கிசான் மோர்ச்சா, செய்தி தொடர்பாளர் டாக்டர் தர்ஷன் பால் சிங், ”குடியரசு தினத்திற்கு முன்பு இங்கு நிறைய மக்கள் வந்து நன்கொடைகள் வழங்கினர். அது இப்போது குறைந்துள்ளது” எனக் கூறியதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கு எல்லையை விட்டுக் கிளம்பி இருக்கும் விவசாயிகள் திரும்பும்போது, அதிக நன்கொடைகள் வரும் என்று நம்புவதாகவும், தற்போது நாளொன்றுக்கு கிடைக்கும் 5 முதல் 6 லட்சம் வரையிலான நன்கொடைகள், உணவு, மின்சாரம், மருத்துவ வசதிகள், மேடை அமைப்புகள், தார்ப்பாய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என விவசாய தலைவர்கள் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்