Aran Sei

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு

credits : the indian express

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகள், எதார்தத்தை பிரதிபலிக்கவில்லை என தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவில் குற்றங்கள்’ என்ற பெயரில் என்சிஆர்பி தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டைவிட 2020 ஆம் ஆண்டில் 8.3 விழுக்காடு வழக்குகள் குறைவாக பதியப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் குடும்ப வன்முறை குற்றங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் 1.1 லட்சம் குடும்ப வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக 19,962 வழக்குகளுடன் மேற்கு வங்க மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. 14,454 வழக்குகள் மற்றும் 13,765 வழக்குகளுடன் உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

”வழக்குகளின் எண்ணிக்கை எதார்தத்தை பிரபலிக்கவில்லை” என என்சிடபிள்யூ தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார்.

“அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர்களுடனான சந்திப்பிற்கு பிறகு, தேசிய பெண்கள் ஆணையத்தால் பெறப்பட்ட புகார்களைவிட குறைவான எண்ணிக்கையில் தான் காவல்துறையினரால் குறைவான எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஊடரங்கு காரணமாக காவல் நிலையத்திற்கு சென்று பெண்களால் உதவி பெற முடியவில்லை” அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடரங்கு காரணமாக பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறைகள் அதிகரித்திருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் பெண்கள்மீதான வன்முறையைத் தவிர்க்கப் பெண்களை மேம்படுத்தும் வகையில், கடன் தவனைகளை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசமும் நிதி உதவிகள் வழங்க வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

”முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதை நாடாளுமன்ற நிலைக்குழு பதிவு செய்துள்ளது. ஊரடங்கு காரணமாக குடும்பத்துடன் அதிக நேரங்கள் செலவிடுதல், வீட்டில் இருந்து பணிபுரிதல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் இடையூறு ஆகியவற்றின் காரணமாக குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஊரடங்கு காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது காணமால் போய் உள்ளனர்.” என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஆனந்த சர்மா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டைவிட 2020ஆம் ஆண்டில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் மீதான குற்றங்கள் 9.3 விழுக்காட்டிலிருந்து 9.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : The Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்