Aran Sei

மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்: பாஜகவில் சேர அழைப்பு

credits : telegraph india

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான தினேஷ் திரிவேதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாராக்பூர் மக்களவை தொகுதியிலிருந்து போட்டியிட்ட தினேஷ் திரிவேதி அர்ஜுன் சிங்கிடம் தோல்வியடைந்தார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களால் அவர் மாநிலங்களவைக்கு அனுப்பபட்டார்.

இந்நிலையில், இன்றைய தினம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அரசியல் தெரியாத நபரால் (பிரசாந்த் கிஷோர்) இயக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி, அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

‘பிரதமர் கருணையைப் பற்றி பாடம் எடுப்பதை விடுத்து, போராடும் விவசாயிகளுக்கு கருணை காட்டுங்கள்’ – திரிணாமூல்

அவர், ”நாம் இங்கே நம் தாய்நாட்டிற்காகக் குரல் கொடுக்கத் தான் வந்திருக்கிறோம். என்னை இங்கே அனுப்பிய எனது கட்சிக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தற்போதைய சூழலில் மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை, ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். ஆனால் நான் இங்கே உட்கார்ந்து கொண்டு, எதுவும் பேசவில்லை என்று என் ஆன்மா சொல்கிறது, நான் ராஜினாமா செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

’தேசபக்தியை பற்றி பாடம் எடுப்பவர்களுக்கு, தேசிய கீதத்தை பாட தெரியவில்லை’ – பாஜக மீது திரிணாமூல் கண்டனம்

தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்தது தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த சவுகாதா ராய், ”இது துரதிர்ஷ்டவசமானது. அவர் விலகியது வருத்தமளிக்கிறது. அவர் ராஜினாமா செய்தது நல்ல முடிவல்ல. அவர் அதிருப்தியாக இருந்தர் என்று தெரியும், ஆனால் கட்சியை விட்டு விலகுவார் என்று நாங்கள் எண்ணவில்லை” என்று என்டிடிவி இணையதளத்தில் வெளியான செய்தி கூறியுள்ளது.

‘வடஇந்தியாவின் “ஜெய் ஸ்ரீராம்” மேற்கு வங்கத்தின் முழக்கமல்ல. ஜெய் வங்காளமே எங்களுடையது’ – திரிணாமூல் காங்கிரஸ்

தினேஷ் திரிவேதி திரிணாமூல் காங்கிரசிலிருந்து விலகுவதற்கு ஒராண்டிற்கு மேல் எடுத்துக் கொண்டுள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் இணைந்து கொள்ளலாமெனப் பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா அழைப்பு விடுத்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது
அவர் தனியார் துறையைப் பற்றிப் பிரதமர் மோடி பேசியதை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘ மம்தா பானர்ஜியின் அகண்ட வங்கதேசம் ’ – பாஜகவின் பிளவுவாத அரசியலுக்கு திரிணாமூல் கண்டனம்

கடந்த டிசம்பர் மாதம் திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த முக்கிய தலைவரான சுவேண்டு அதிகாரி உட்பட பல (40 க்கும் மேற்பட்டோர்) திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையை வரவேற்று ட்விட் செய்த திரிவேதி இன்றைய தினம் தன்னுடைய ராஜினாமாவை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்