Aran Sei

மாடுகள் நம்முடைய தாய் என கூறிய பிரதமர்: சாவர்கரின் புத்தகத்தை மேற்கோள்காட்டி திக்விஜய சிங் பதிலடி

மாட்டை வழிபடுவதை இந்துத்துவ சித்தாந்தவாதியான விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆதரிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய சிங் கூறியுள்ளார்.

டிசம்பர் 23ஆம் தேதி, உத்தரபிரதேச மாநில வாரணாசியில், பால்வளத் திட்டம் உள்ளிட்ட 27 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, மாடுகளையும் எருமைகளையும் கேலி பொருளாக்குபவர்கள் எட்டு கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இக்கால்நடைகளைச் சார்ந்து இருப்பதை மறந்து விடுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், “மாடுகளைக் குறித்து பேசுவதும், கோவர்தன்(கிருஷ்ணர்) குறித்து பேசுவதும் சிலரால் பாவகரமான விஷயமாகிவிட்டது. மாடு சிலருக்கு பாவகரமானதாக இருக்கலாம். ஆனால், நமக்கு அது தாய். புனிதம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் நேரத்தில் பசுக்கள் மீது பாசம் கொள்ளும் மோடி – காங்கிரஸ் விமர்சனம்

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 25), மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறையில்  திக்விஜய சிங் கல்ந்துக்கொண்டு உரையாற்றியுள்ளார்.

அப்போது, பிரதமர் மோடியில் பேச்சிற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அவர், சாவர்க்கர் தனது புத்தகம் ஒன்றில் மாட்டிறைச்சி உண்பதில் தவறில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

“மாடு என்பது அதன் மலத்தில் (கழிவுகளில்) சுருண்டு கிடக்கும் ஒரு விலங்கு என்றும், அதனால் அதை மாதா (தாயாக) கருத முடியாது என்றும் சாவர்க்கர் தனது எழுதியிருந்தார்.இந்து மதத்திற்கும் இந்துத்துவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விநாயக் தாமோதர் சாவர்க்கர் தனது புத்தகத்தில் தெளிவாக எழுதியுள்ளார்” என்று திக்விஜய சிங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்