Aran Sei

இஸ்லாமிய வெறுப்பை சரிசெய்ய மோடியை கட்சியிலிருந்து நீக்குங்கள் – ஆஎஸ்எஸ் தலைவருக்கு திக்விஜய் சிங் சவால்

ஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என்று வெறுப்புடன் பேசும் ஒருவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங், “உங்களின் கருத்துக்களுக்கு நீங்கள் நேர்மையாக இருந்தால், அப்பாவி இஸ்லாமியர்களை துன்பத்துக்கு உள்ளாகிய பாஜக தலைவர்களை உடனடியாக அவர்களின் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூலை 4), உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் குவாஜா இப்திகார் அகமது எழுதிய தி மீட்டிங் ஆப் மைன்ட்ஸ் எனும் நூல் வெளியிட்டு விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று பேசியுள்ளார்.

அப்போது, “இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என்று ஒருவர் வெறுப்புடன் கூறினால், அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. சிறுபான்மையினருக்கு எதிராக கொடுமைகள் நடக்கும்போது, பெரும்பான்மை மக்களிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் குரல் எழ வேண்டும். பசு புனிதமான ஒரு விலங்கு. ஆனால், பசு காவலர்கள் என்ற பெயரில் சில அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இது இந்துத்துவாவிற்கு எதிரானது.” என்று தெரிவித்துள்ளார்.

‘உத்தரகண்ட்டிற்கு முதலமைச்சர் வேண்டுமா? யோகி ஆதித்யநாத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ – அகிலேஷ் யாதவ்

மேலும், “இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மரபணுவும் ஒன்றுதான். இந்தியர்கள் அனைவரும் நமது முன்னோர்கள் வழி வந்தவர்கள்தான். இந்து-இஸ்லாமியர்கள் ஒற்றுமை தவறாக முன்னெடுக்கப்படுகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜூலை 5), டிவிட் செய்துள்ள திக்விஜய் சிங், “மோகன் பகவத் ஜி, இந்த கருத்துக்களை உங்கள் சீடர்களுக்கும், போதகர்களுக்கும், விஸ்வ இந்து பரிஷத் / பஜ்ரங் தள உறுப்பினர்களிடம் சொல்வீர்களா? இந்த போதனைகளை நீங்கள் மோடி-அமித்ஷா ஜி மற்றும் பாஜக முதலமைச்சர்களுக்கு அனுப்புவீர்களா? மோகன் பகவத் ஜி, உங்கள் சீடர்களையும் இக்கருத்துகளை பின்பற்ற வைத்தால், நான் உங்கள் அபிமானியாகிவிடுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் வெறுப்பை உருவாக்குகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக விதைக்கப்பட்ட வெறுப்பை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. மோகன் ஜி, நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு நீங்கள் நேர்மையாக இருந்தால், அப்பாவி இஸ்லாமியர்களை துன்பத்துக்கு உள்ளாகிய பாஜக தலைவர்களை உடனடியாக அவர்களின் பதவிகளில் இருந்து நீக்க உத்தரவுகளை பிறப்பிக்கவும். இதை, பிரதமர் மோடி மற்றும் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் தொடங்குங்கள்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்