Aran Sei

‘வைரம் விலை குறையும்; மருந்துகள் விலை உயரும்’ – பட்ஜெட் குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம்

வைரத்தின் விலை குறையும், மருந்துகளின் விலை உயரும், இது தான் ஒன்றிய அரசின் பட்ஜெட்டா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நீங்கள் பட்ஜெட்டைப் பார்த்தீர்களா? நடுத்தர வர்க்கத்தினருக்கு, ஏழைகளுக்கு அதில் என்ன உள்ளது. ஒன்றுமில்லை. வைரத்தின் விலை குறையும் என்றும் மருந்துகளின் விலை உயரும் என்றும் இன்று காலை ஒருவர் என்னிடம் கூறினார். நான் ஒன்றிய அரசைக் கேட்க விரும்புகிறேன், நீங்கள் எப்போது கண்களைத் திறப்பீர்கள்?

கருத்துக் கணிப்புகள் எடுக்கும்போது உங்கள் கருத்தை தெரிவியுங்கள். மதம், ஜாதி பற்றி பேச வரும் அரசியல் கட்சிகளிடம் கேளுங்கள், உங்கள் வளர்ச்சிக்கு என்ன சொல்கிறார்கள்? 5 ஆண்டுகளில் அவர்கள் உங்களுக்காக என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்