அனைவருக்கும் வீடு கட்டித்தரும் மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் (பிஎம்ஏஒய்) போலி ஆவணங்கள் வைத்து பல ஆயிரம் கோடி ரூபாயை, டிஎச்எஃப்எல் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
அந்த நிறுவனத்தின் மேம்பாட்டாளர்களான கபில் வாத்வான், தீரஜ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவர்கள் 14 ஆயிரம் கோடிக்கு வீட்டுக் கடன் வழங்கியதாக போலியாக கணக்கு சமர்பித்துரூ. 1,880 கோடி வரி சலுகையை மத்திய அரசிடம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிஎச்எஃப்எல் நிறுவனத்தின் கணக்குளை தணிக்கை செய்ததில், 2.6 லட்சம் கோடி மோசடி கணக்குகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலானவைகளில் பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் மானியம் பெறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அவை அனைத்தும் அந்நிறுவனத்தின் பாந்தரா கிளையில் மேற்கொள்ளப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2007 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ரூ.14,046 கோடி தொகை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதில் ரூ. 11,755 கோடி பல போலி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.