Aran Sei

தருமபுரி: கெயில் திட்டத்திற்காக நில அளவை எடுக்கும் பணிகளை எதிர்த்து விவசாயி தற்கொலை – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

ருமபுரியில் கெயில் திட்டத்திற்காக நில அளவை எடுக்கும் பணிகளை எதிர்த்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்திற்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது எஸ்.டி.பி.ஐ. கட்சி. மேலும், தமிழக அரசு வாக்குறுதிப்படி திட்டத்தை சாலையோராமாக செயல்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்காக தனது விவசாய நிலத்தில் மேற்கொள்ளப்படும் நில அளவை எடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள காரியப்பனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேய்ச்சல் நிலங்கள் மீட்டெடுப்பின் அவசியத்தை உணர்த்திய உயர் நீதிமன்ற தீர்ப்பு – சதீஷ் லெட்சுமணன்

கர்நாடகாவின் பயன்பாட்டுக்காக, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடகத்தில் பெங்களூருக்குச் செல்ல வேண்டிய கெயில் எரிவாயுக் குழாய்களைத் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாகக் கொண்டு செல்ல கெயில் நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் ஒன்றிய அரசு நீதிமன்றத்தின் வாயிலாக திட்டத்தை துரிதப்படுத்தி வருகின்றது.

திமுக தனது 2019 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலும், 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டம் சாலையோரமாக மட்டுமே நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக முதல்வரும் தனது பரப்புரைகளிலும், ஆட்சிக்கு வந்தபின்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாய நிலத்தில் திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் உறுதியளித்தார். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் திட்டம் சாலை ஓரமாக மட்டுமே செயல்படுத்தப்படும் என விவசாயிகளிடம் இரண்டு முறை உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சேலம், தருமபுரி மாவட்ட விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் காவல்துறை, வருவாய்த்துறை ஒத்துழைப்புடன் விவசாய நிலங்களில் அளவீடு, மண் பரிசோதனை செய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபெற்று வந்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததால் நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நில அளவை பணிகளை தடுத்த நிறுத்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும், எவ்வித பேச்சுவார்த்தையும் ஏற்பாடு செய்யாமல் நல்லம்பள்ளி வட்டாட்சியர் விவசாயிகளிடம் மிக கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்.

இந்து ராஷ்ட்ரா – இந்துஃபோபியா; ஒன்றிய அரசின் இரட்டை சவாரிக்கான காரணம் என்ன? – மு.அப்துல்லா

இந்நிலையில், காவல்துறையினர் துணையுடன் வருவாய்த்துறையினர், தீயணைப்பு வாகனங்கள், வஜ்ரா வாகனம் உள்ளிட்டவற்றின் பாதுகாப்போடு விவசாயிகளின் நிலத்தை அளப்பதற்கு முயற்சி எடுத்தபோது, காரியப்பனஹள்ளியை சேர்ந்த கணேஷ் என்கிற விவசாயி திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் மற்றும் கிணறு ஒன்று உள்ளது. கெயில் திட்டத்திற்காக இவரது நிலத்தில் அளவீடு செய்யும் பணிக்காக கெயில் நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் வந்திருந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தருமபுரி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாமல், கெயில் நிறுவனத்துக்கு ஆதரவாக மிக கடுமையாக நடந்து கொண்டதே விவசாயி கணேஷனின் தற்கொலைக்கு மிக முக்கிய காரணம். வருவாய்த்துறை அதிகாரிகளின் இந்த அடாவடி கண்டிக்கத்தது. இந்த விவகாரத்தில் விவசாயிகளிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தனியார்மயம்தான் – ஷோபா சக்தி

தமிழக அரசு எப்படியேனும் இந்த திட்டத்திலிருந்து தங்களின் விவசாய நிலத்தை பாதுகாக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்த விவசாயிகளுக்கு, வருவாய்த் துறையினரின் இந்த நடவடிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கெயில் எரிவாயு திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த திட்டம் விவசாய விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படாது என்கிற உத்தரவாதத்தை தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி திட்டத்தை சாலையோராமாக செயல்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை கலவரக்காடாக ஆக்க துடிக்கும் H Raja…… பியூஷ் மனுஷ் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்