ஜார்கண்ட் மாநிலம் தணாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி வாகனம் மோதி கொல்லப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை திறனற்ற வகையில் செயல்படுவது ஏமாற்றம் அளிப்பதாக அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 28 அன்று, தணாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது டெம்போ வாகனத்தால் மோதப்பட்டு சர்ச்சைக்குரிய முறையில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்திருந்த அறிக்கையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகளின் வழியாக அவர்கள் மது அருந்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தடய அறிவியல் ஆய்வறிக்கை கூறுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வழக்கின் விசாரனையின்போது தெரிவித்த தலைமைநீதிபதி ரவி ரஞ்சன் அடங்கிய அமர்வு, “சம்பவத்தின் போது அந்தப் பகுதியைக் கடந்த மூன்று பேரை மத்தியப் புலனாய்வுத் துறைக் கண்டறியாதது ஏமாற்றம் அளிக்கிறது. மத்தியப் புலனாய்வுத் துறை தொழில்முறை புலனாய்வு நிறுவனம். எனினும், அதன் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக உள்ளது” என்றும் கூறியுள்ளனர்.
source: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.