Aran Sei

மோடியின் வங்கதேச வருகைக்கு எதிரான போராட்டம் – காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 11 போராட்டக்காரர்கள் மரணம்

பிரதமர் நரேந்திரமோடியின் வங்கதேச பயணத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் கிழக்கு வங்கதேச பகுதியில் உள்ள இந்து கோவில்களும், ரயிலும் தாக்கப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 26) அன்று பிரதமர் மோடி வங்கதேசத்தின் 50-தாவது தேசிய நாளை முன்னிட்டு பயணம் மேற்கொண்டார். மேலும் மார்ச் 27 அன்று 12 லட்சம் தடுப்பூசிகளை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவிடம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

அஸ்ஸாமின் வரலாறை தவறாக கூறிய மோடி – பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் வலியுறுத்தல்

இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இயற்றும் சட்டங்களைக் கண்டித்து அவரது வங்கதேச வருகையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் இந்தியாவுக்கும் நாயகன்தான் – பிரதமர் மோடி

மேலும், வெள்ளிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தி கூறுகிறது.

தலைநகர் டாக்காவில் நடந்த இந்தப் போராட்டத்தைக் கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் துப்பாக்கி குண்டுகளையும் கொண்டு  கலவரக்காரர்களைக் காவல்துறை கலைக்க முயன்றதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஏஏ-வுக்கு எதிராக அஸ்ஸாமில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் – மாணவர்கள் மீது காவல்துறை தடியடி

இந்தப் போராட்டம் குறித்து தெரிவித்த ஹஸிபட்-இ -இஸ்லாம் அமைப்பைச் சார்ந்த அஜிஸுல் ஹயூ , “அமைதியான எங்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது, உயிரிழந்த எங்கள் சகோதரரின் தியாகத்தை வீண் போக விடமாட்டோம்” என்று கூறியுள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்