Aran Sei

‘சூழலியலை அழித்து; அமெரிக்க நிறுவனங்கள் லாபமடையும்’ – ஆந்திராவின் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்க்கும் சி.பி.எம்

ந்திராவின் ரணஸ்தலம் மண்டல் எனும் ஊரில் வரவுள்ள கொவ்வாடா அணுமின் நிலைய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இத்திட்டம் ஒட்டுமொத்த வடக்கு ஆந்திராவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் ஸ்ரீகாகுளம் மாவட்டச் செயலர் கோவிந்த ராவ் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அரசின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் கொத்தபாலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி போராட்டம் நடத்தியுள்ளது.

ஹிஜாப் விவகாரம்: இஸ்லாமியப் பெண்களின் கல்வியை பறிக்கும் இந்துத்துவா – சித்தராமையா குற்றச்சாட்டு

இத்திட்டத்தால் ஏதேனும் மோசமான நிகழ்வு நடந்தால், அதன் தாக்கம் ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து ஒடிசாவின் சத்ராபூர் வரை இருக்கும் என்றும், இத்திட்டத்தால் வரும் பலன்களை விட நாட்டின் நிதிச்சுமையே அதிகரிக்கும்” என்று கோவிந்த ராவ் கூறியுள்ளார்.

இந்தத் திட்டமானது நமது சுற்றுச்சூழலை அழித்து, அமெரிக்க நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க மட்டுமே உதவும், ஆகவே வரும் நாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் என்று கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்