Aran Sei

கறுப்பினத்தவரைக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறை – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட்டை கொன்ற காவல்துறை அதிகாரி டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்காவின் மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக  தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட் கொலை – போலீஸ் அதிகாரி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில் கருப்பின சிறுமி போலீசால் சுட்டுக் கொலை

மேலும், இந்தத் தீர்ப்பை வாசித்த நீதிபதி பீட்டர் காஹில், இந்தத் தீர்ப்பு உணர்வுரீதியாகவோ, அனுதாபத்தினாலோ வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளதாகவும், பிளாய்டின் மரணத்திற்கு பின்னர் அவர் சார்ந்த கறுப்பின சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு எழுந்துள்ள வலியை உணர்வதாக நீதிபதி தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெரிக் சாவின் உடனடியாகச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” கருப்பின உயிர்கள் முக்கியமானவை ” – ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணை ஆரம்பம்

சென்ற ஆண்டு மே 25 அன்று, ஒரு கடையில் $10 கள்ள நோட்டை கொடுத்ததாக காவல்துறை  அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, கைவிலங்கு மாட்டப்பட்ட, கருப்பினத்தவரான 46 வயதான ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில், டெரிக் சாவின், தனது முட்டியை அழுத்தி மூச்சுத் திணற வைக்கும் வீடியோ உலகெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற மூன்று அதிகாரிகள்மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அவர்கள்மீது கொலை, படுகொலைக்கு உடந்தை மற்றும் உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்