Aran Sei

தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது – மே 17 அறிக்கை

2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் நடைபெற்ற இனப்படுகொலை நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தடையை மீறி நினைவேந்துவோம். இது எம் அடிப்படை உரிமை” என்று மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமைதியான முறையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி ஆண்டுதோறும் நடத்தி வந்த நினைவேந்தல் நிகழ்வு 2017ல் தடுக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு 17 தோழர்கள் சிறைப்பட்டனர். நான்கு தோழர்கள் குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்டனர். தொடர்ச்சியாக 2018, 2019-லும் தடையை மீறி நினைவேந்த சென்ற காரணத்தினால் வழக்குகள் பதியப்பட்டன.

இந்நிலையில் கடந்த மே 2-ம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் நினைவேந்தல் நடத்த மெரினா, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் நடத்த அனுமதி கோரினோம். நீண்ட ஆலோசனைக்கு பின் கடந்த வாரம் காவல்துறையே நினைவேந்தல் நடத்த பெசன்ட் நகர் கடற்கரையை தேர்ந்தெடுத்து ஒதுக்கிக் கொடுத்தது.

இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழர்களுக்கு உதவும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு தவறவிட வேண்டாம் – மே 17 இயக்கம் வலியுறுத்தல்

“அனைத்துக் கட்சி தலைவர்கள், ஆளுமைகள் பங்கேற்பதாக அறிவித்த பின்னர், நேற்று மே 21 2022 பின்னிரவில் அனுமதி கொடுப்பது இயலாது என காவல்துறை அறிவித்தது. இதற்கான அனுமதி மறுப்பு கடிதத்தை பின்பு அளித்தனர்.”

இறந்தவர்களுக்கு நினைவேந்துவது அடிப்படை உரிமை. இதை எந்த சட்டத்தின் மூலமாகவும் தடுக்க இயலாது. இந்நிலையில் இப்பண்பாட்டு நிகழ்வை நடப்பதற்கு அனுமதி மறுப்பது சனநாயக விரோதம் மட்டுமல்ல, தமிழின விரோத அடக்குமுறையாகும்.

மெரினா கடற்கரையில் மட்டுமல்லாமல் அனைத்து நீர் நிலைகளில் தமிழர்கள் இறந்தோருக்கு நினைவேந்துவது இன்றளவும் நடக்கும் நிலையில் எவ்வித அடிப்படையுமின்றி இந்நிகழ்வினை தடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மே 17 இயக்கம் வேண்டுகோள்

திமுக அரசு இதற்கு முந்தைய அதிமுக அரசின் நிலையையே தொடர்வது சனநாயகவிரோதமாகும். ஒன்றிய அரசின் உள்துறை, ஒன்றிய உளவுத்துறையின் அழுத்தத்தின் காரணமாகவும் நிகழ்வு தடை செய்யப்பட்டதாகவும் எமக்கு சொல்லப்பட்டது. எக்காரணமாயினும், தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்விற்கான உரிமையை தமிழக திமுக அரசு உறுதி செய்யாதது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழீழ இனப்படுகொலை மற்றும் அதற்கான நினைவேந்தல் நடத்துவது தொடர்பாக திமுக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அடக்குமுறையை மீறி தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும். எந்நிலையிலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என உறுதிபட தெரிவிக்கிறோம். அடக்குமுறையை சனநாயக ரீதியில் எதிர்கொண்டு அம்பலப்படுத்த அனைத்து சனநாயக ஆற்றல்களையும் அழைக்கிறோம். பெசன்ட் நகர் பேருந்து நிலையம் முன்பு மாலை 4 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி, கடற்கரையை நோக்கி நினைவேந்த செல்வோம்!” என்று தெரிவித்துள்ளனர்.

ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan | Nenjukku Needhi | Udhayanidhi

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்