நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான டெமோகிரசி டைம்ஸ் நெட்ஒர்க் அமைப்பின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு
அதில், தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 182 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டுள்ளது.
Democracy Times Network Opinion Poll Projections-
Tamil Nadu: 234 seats
𝗗𝗠𝗞+: 182 Seats
𝗔𝗗𝗠𝗞+: 51 Seats
𝗔𝗠𝗠𝗞+: 01 Seat
𝗡𝗧𝗞: 00 Seats
𝗠𝗡𝗠: 00 Seats#TamilNaduAssemblyElection2021 #TNElections2021 #AssemblyElections2021 #TNAssemblyElection2021 pic.twitter.com/M6oI0L0W8J— Democracy Times Network (@TimesDemocracy) March 25, 2021
மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணி 51 தொகுதிகளிலும் , அமமுக கூட்டணி 1 இடத்திலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான திமுக – காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளிலும், என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று டெமோகிரசி டைம்ஸ் நெட்ஒர்க் கூறியுள்ளது.
Democracy Times Network Opinion Poll Projections-
Puducherry: 30 seats
𝗦𝗗𝗔 (Congress+DMK): 11 Seats
𝗡𝗗𝗔 (AINRC+BJP+ADMK): 19 Seats
𝗢𝗧𝗛𝗘𝗥𝗦: 00 Seats#PuducherryElection2021 #AssemblyElections2021 #PuducherryElections pic.twitter.com/rGPTD4AuhR— Democracy Times Network (@TimesDemocracy) March 25, 2021
இதேபோலக் கேரளாவில் 73 தொகுதிகளில் வென்று கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அமைப்பார்கள் என்றும் ,காங்கிரஸ் 66 இடங்களிலும் , பாஜக 1 இடத்திலும் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Democracy Times Network Opinion Poll Projections-
Kerala: 140 seats
𝗟𝗗𝗙: 73 Seats
𝗨𝗗𝗙: 66 Seats
𝗡𝗗𝗔: 01 Seat
𝗢𝗧𝗛𝗘𝗥𝗦: 0-2 Seats#KeralaAssemblyElections2021 #KeralaElections2021 #AssemblyElections2021 #KeralaElections pic.twitter.com/Z9VqB9lpij— Democracy Times Network (@TimesDemocracy) March 25, 2021
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் 65 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 60 தொகுதிகளிலும் , மற்றவை 1 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Democracy Times Network Opinion Poll Projections-
Assam: 126 seats
𝗨𝗣𝗔: 65 Seats
𝗡𝗗𝗔: 60 Seats
𝗔𝗝𝗣-𝗥𝗗: 01 Seat
𝗢𝗧𝗛𝗘𝗥𝗦: 0-1 Seat#AssamAssemblyElections2021 #AssamAssemblyPolls #AssamWantsBJPAgain #AssemblyElections2021 pic.twitter.com/2wODyKqkTj— Democracy Times Network (@TimesDemocracy) March 25, 2021
பாஜக ,திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 149 இடங்களிலும் , பாஜக 126 இடங்களிலும் ,காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி 19 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் டெமோகிரசி டைம்ஸ் நெட்ஒர்க் தெரிவித்துள்ளது.
Democracy Times Network Opinion Poll Projections-
West Bengal: 294 seats
𝗔𝗜𝗧𝗖+: 149 Seats
𝗡𝗗𝗔: 126 Seats
𝗦𝗠 (Congress+ Left+ ISF): 19 Seats
𝗢𝗧𝗛𝗘𝗥𝗦: 00 Seats#WestBengalElections2021 #AssemblyElections2021 #WestBengalElections #WestBengalElection2021 pic.twitter.com/Z6VsDBctfi— Democracy Times Network (@TimesDemocracy) March 25, 2021
முன்னதாக, தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக டெமோகிரசி டைம்ஸ் நெட்ஒர்க் கருத்துகணிப்பு என இரண்டு தினசரி நாளிதழ்கள் மற்றும் இரண்டு தொலைக்காட்சிகள் கருத்து கணிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், அவற்றை மறுத்த அந்நிறுவனம் உண்மையான முடிவுகளை விரைவில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டும் என கூறியிருந்தது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.