Aran Sei

மத்திய அரசின் குறைகளை சுட்டிக்காட்டிய நாடகத்திற்கு எதிர்ப்பு: எங்களுக்கு ஜனநாயகம் தெரியாது என்று பாஜகவினர் மிரட்டல்

மேற்குவங்கத்தில் மத்திய பாஜக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டும் நாடகத்தை நடத்தக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 27 அன்று உலக நாடகத்தினத்தை முன்னிட்டு “ஜன கன மன” என்ற நாடகக்குழு மேற்கு வங்கமாநிலம் சுந்தர்பன் பகுதியில் உள்ள பச்சிம் பஸந்தி நாடகம் ஒன்றை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடகத்தின் தலைப்பு பிடிக்கவில்லை அதனால் எதிர்க்கிறோம்- விஜய் டெண்டுல்கரின் நாடகத்திற்கு பஜ்ரங் தள் எதிர்ப்பு

பாஜக அரசின் பாசிசப்போக்கு, குடியுரிமை திருத்தச் சட்டம், சமையல் எரிவாயு விலையேற்றம் போன்றவைகளை விமர்சிக்கும் விதமாக “எலிப்பொறி” என்ற நாடகத்தை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்ததாக தி வயர் செய்தி கூறுகிறது.

பச்சிம் பஸந்தி பகுதியில் நாடகத்தை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் அப்போது அதன் ஒரு பகுதியாகப் பாஜக அரசுக்கு எதிராக மக்களிடம் துண்டறிக்கை வழங்கியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க மோடியும் இந்திய ட்ரம்பும் – வீழும் ஜனநாயகம்

இந்நிலையில் துண்டறிக்கை வழங்கியதுக்கு எதிர்ப்பு வந்ததால், அதை விடுத்து, நாடக வேலைகளில் ஈடுபட்டதாகவும் தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, நாடகத்தை நிகழ்த்த ஈடுபட்டபோது, நாடகத்தை நிகழ்த்த கூடாது என்று பாஜகவினர் பிரச்சனையில் ஈடுபட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

“விவசாயிகள் சொல்வதை கேளுங்கள். அதுதான் ஜனநாயகம்” – முன்னாள் அரசு ஊழியர்கள் சங்கம்

இந்நிலையில் இது குறித்து நாடகத்தின் ஆசிரியர், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என பாஜகவினரிடம் கூறியபோது ” ஜனநாயகம் என்றால் எங்களுக்கு என்னவென்று புரியாது, இந்த நாடகத்தை இங்குமட்டுமில்லை வங்கத்தில் எங்கும் நடத்தக் கூடாது ” என்றும் மிரட்டியுள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இந்த நாடகம் உள்ளதாக பாஜகவினர் கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்