Aran Sei

ஐந்து மடங்காக உயர்ந்திருக்கும் ஆக்சிஜன் தேவை – நாளொன்றுக்கு 100 டன் தேவைப்படுவதாக  ராஜீவ் காந்தி மருத்துவமனை தகவல்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவை 5 மடங்காக உயர்ந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் நாளொன்றுக்கும் ஒரு லாரி ஆக்சிஜன் தேவைப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்து முதல் ஏழு லாரிகள் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஒரு லாரிக்கு 15 டன் ஆக்சிஜன் உள்ள நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மட்டும் 100 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என மருத்துமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நிரப்பப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களில் நிரப்பபட்டு பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்த மத்திய அரசு – தானாக முன்வந்து வழக்கு பதிந்த உயர்நீதிமன்றம்

கொரோனா காரணத்தால் தேவை அதிகரித்திருப்பதால், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து இரவு, பகல் பாராமல் தொடர்ச்சியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாக ஐநாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கீழ்பாக்கம், ஸ்டான்லி, கிங் மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் தேவை அதிகரித்திருப்பதால், புதுச்சேரி கிளையில் இருந்தும் வரவழைத்துத் தரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உற்பத்தியைவிட தேவை குறைவாக இருப்பதாக, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : Puthiya Thalaimurai

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்