“ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்முதலில் உள்ள சிக்கல்கள் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு, நான் கேள்வியெழுப்பியபோது, என்னுடைய கேள்வியை யாரும் பெரிதுப்படுத்தவில்லை. இதனால் (கேள்வி கேட்டதால்) தான், நான் சிறையில் அடைக்கப்பட்டேன்” என்று மருத்துவர் கஃபீல் கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தின் கோராக்பூர் மாவட்டத்தில் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 100 க்கும் மேற்பட்ட கைகுழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறக்கவில்லையெனக் கூறிய உத்தர பிரதேச அரசாங்கம் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான் உட்பட ஒன்பது பேரைக் கைது செய்தது.
2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், 2019 ஆம் ஆண்டு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். இருந்தாலும் தன்னுடைய பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
நேற்றைய தினம், மருத்துவர் கஃபீல் கான், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்முதலில் உள்ள சிக்கல்கள் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு, நான் கேள்வியெழுப்பியபோது, என்னுடைய கேள்வியை யாரும் பெரிதுப்படுத்தவில்லை. இதனால் (கேள்வி கேட்டதால்) தான், நான் சிறையில் அடைக்கப்பட்டேன்” என்று பதிவிட்டிருந்தார்.
In 2017,When I raised th issue of crisis in procurement of Oxygen, nobody took me seriously.
instead thrown in Jail😢Since then have been demanding better health policy – #HealthForAll
Today the whole nation is suffering due to oxygen shortage -plz wake up 🙏@drharshvardhan pic.twitter.com/cL4R83YwtT
— Dr Kafeel Khan (@drkafeelkhan) April 19, 2021
மேலும், “அப்போது இருந்தே, அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் அளவுக்குச் சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று நான் குரல் கொடுத்து வருகிறேன். இப்போது இந்தத் தேசமே ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. எல்லோரும் கண் விழித்துக் கொள்ளுங்கள்” என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டினைத் தவிர்க்க ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ – ரயில்வே துறை முடிவு
இந்நிலையில், இன்றைய தினம், தன்னை மீண்டும் மருத்துவப் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
माननीय मुख्यमंत्री @myogiadityanath जी
कोरोना वायरस की दूसरी लहर त्राही-त्राही मचा रही है।मेरा ICU में 15 वर्षो से अधिक का अनुभव शायद कुछ ज़िन्दगियाँ बचाने में काम आ सके।आपसे विनम्र निवेदन है कि इस कोरोना महामारी में देश की सेवा करने का अवसर दें 🙏
22-8-2017 से निलम्बित हूँ । pic.twitter.com/MHcmtKOEZv
— Dr Kafeel Khan (@drkafeelkhan) April 20, 2021
அந்தக் கடிதத்தில், ”கொரோனா இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்ததால் ஏற்பட்டுள்ள அனுபவம் சில உயிர்களைக் காப்பாற்ற உதவும். எனவே, இந்தக் கொரோனா பெருந்தொற்றின்போது நாட்டுக்குச் சேவை செய்ய வாய்ப்பளியுங்கள் . நான் கடந்த 22-8-2017 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டேன்” என்று உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு மருத்துவர் கஃபீல் கான் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.