Aran Sei

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேத உணவு, இயற்கை சார்ந்த வாழ்க்கை: கங்கனா ரனாவத் யோசனை

க்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய மரம் நட வேண்டும் எனவும் இயற்கை சார்ந்த வாழ்வுக்கு மாற வேண்டும் எனவும் பாலிவுட் திரைக்கலைஞர் கங்கனா ரனாவத்  அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தேவை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.
ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது தொடர்பாக பேசிய, ஐசிஎம்ஆரின் இயக்குனர் பல்ராம் பார்கவா, கொரோனா தொற்று திடீரென்று அதிகரித்ததால், மக்கள் பீதியால் மருத்துவமனையில் குவிந்து வருவது, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கான முக்கிய காரணம் என கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

“தாண்டவ் படக்குழுவினரின் தலையை வெட்டி எடுக்க வேண்டும்” – கங்கனா ரணாவத்தின் டிவிட்டர் பக்கம் முடக்கம்

இந்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைப்பது தொடர்பாக பாஜக ஆதரவாளரான கங்கனா ரனாவத் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “யாரெல்லாம் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாக உணர்கிறீர்களோ, இதை முயற்சி செய்து பாருங்கள். மரங்களை நடுவதே நிரந்தரமான தீர்வு. உங்களால் மரம் நட முடியவில்லை என்றால் மரங்களை வெட்டாதீர்கள். உங்களுடைய துணிகளை மறுசுழற்சி செய்யுங்கள். வேத கால உணவு பழக்கவழக்கத்திற்கு மாறுங்கள். இயற்கை சார்ந்த வாழ்வை வாழுங்கள். இது ஒரு தற்காலிகமான தீர்வு தான், இப்போது இது உதவி செய்யும். ஜெய் ஸ்ரீராம்” என்று பதிவிட்டுள்ளார்.

‘மதக் கலவரத்தைத் தூண்ட முயல்கிறார்’: நடிகை கங்கனா மீது குற்றச்சாட்டு

மேலும், “விஞ்ஞானிகளே கூட ஆன்மிக ஞானத்தை நம்புகிறார்கள். மரங்கள் வலிகளையும், உணர்வுகளையும் புரிந்துக் கொள்ளக் கூடியவை என்பது அறிவியல்பூர்வமாக நிருபணமாகியுள்ளது. மனிதர்கள் கொடூரமாக மரங்களைப் பயன்படுத்தி, துன்புறுத்தியுள்ளனர், தற்போது நாம் சுவாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். நாம் (மனிதர்கள்) மரங்களின் கழுத்தை நெறிக்கக் கூடாது, வாழுங்கள், வாழ விடுங்கள், கையைக் கூப்பிக் கேட்கிறேன்” என்று ட்விட் செய்துள்ளார்.

ரிஹான்னாவிற்கு எதிராக ட்வீட் செய்த பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் – நடிகை தாப்சி பன்னு பதிலடி

“கிராமங்களில் இயற்கையோடு நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடையே கொரோனா தொற்று பரவல் முற்றிலுமாக இல்லை, கூட்டமாக இருக்கும் மாநகரங்களில் தான் இருக்கிறது” என்றும் அவர் ட்விட்டரில் பாலிவுட் திரைக்கலைஞர் கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்