Aran Sei

8 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெல்டா பிளஸ் வேறுபாடு கண்டுபிடிப்பு – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசு கடிதம்

கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் மாறுபாடு கண்டறிப்பட்டுள்ள 8 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது, பரவலான பரிசோதனைகளை நடத்துவது, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பாதுகாப்பை அதிகரிப்பது போன்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை உடனைடியாக எடுக்குமாறு ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், குஜராத் மற்றும் ஹரியானா அரசுகளுக்குச் சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் மாதிரிகள் உடனடியாக இந்திய சார்ஸ் ஜெனோமிக் கன்சார்டியா (ஐஎன்எஸ்ஏசிஓஜி) ஆய்வகங்களுக்கு அனுப்பபடுவது உறுதி செய்யப்பட வேண்டும். இதன் மூலம் தொற்ற்று நோய் தொடர்புகளை நிறுவ முடியும் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திராவின் திருப்பதி மாவட்டம், குஜராத்தில் சூரத், ஹரியானாவின் பரிதாபாத், ஜம்மு காஷ்மீரில் கத்ரா, பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா மற்றும் லூதியானா, கர்நாடகா மாநிலம் மைசூரு மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் டெல்டா பிளஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது என பூஷன் தெரிவித்தார்.

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர் அகில் கோகோய்க்கு பிணை வழங்கிய நீதிமன்றம் – 550 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் விடுவிப்பு

முன்னதாக நாடு முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்ட 45 ஆயிரம் மாதிரிகளில் இருந்து 51 டெல்டா பிளஸ் வேறுபாடு கண்டறியப்பட்டுள்ளது என தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 21 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 9 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 7 பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் 3 பேர், பஞ்சாப் மற்றும் குஜராத்தில் தலா இரண்டு பேர், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவருக்கு  கண்டறியப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source : PTI

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்