Aran Sei

ஒரே வழக்கில் இரண்டு முதல் தகவல் அறிக்கை – கண்டனம் தெரிவித்த டெல்லி நீதிமன்றம்

டெல்லி கலவர வழக்கில், இரண்டு முதல் தகவல் அறிக்கையின் (எஃப்.ஐ.ஆர்) தகவல்களை திரட்டி, ஒருவரை டெல்லி காவல்துறை கைது செய்திருப்பதற்கு டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் எண் 86/2020ல் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தைக் கொண்டு, எஃப்.ஐ.ஆர் எண் 90/2020ல் பதியப்பட்ட வழக்கில் குல்ஃபம் என்ற நண்பரை மே 8, 2020 ஆம் தேதி கைது செய்தனர்.

ஒரு எஃப்.ஐ.ஆரில் பதியப்பட்டிருந்த சாட்சியின் வாக்குமூலங்களை வைத்து மற்றொரு குற்றப்பத்திரிக்கையின் கீழ் கைது செய்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என நீதிபதி வினோத் யாதவ் தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிஸ் முகமது, இருவேறு முதல் தகவல் அறிக்கையில் இருந்து தகவல்களைத் திரட்டி, காவல்துறையினர் கைது செய்திருப்பது, இந்திய அரசியலமைப்பு பிரிவு 20 (2) கீழ் குல்ஃபாமிற்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை மீறுவதாகும் என கூறியுள்ளார்.

இது இரட்டை ஆபத்து, ஒரு நபர்மீது ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை வழக்கு தொடரவோ, தண்டனை விதிக்கவோ முடியாது என வாதிட்டுள்ளார்.

இதனை ஏற்ற நீதிபதி வினோத் யாதவ், குல்ஃபாம் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 436 கீழ் பதியப்பட்டிருந்த புகாரை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

முன்னதாக, டெல்லி கலவர வழக்கில் ஒரே சம்பவத்திற்கு பதியப்பட்டிருந்த 5 முதல் தகவல் அறிக்கையில் நான்கை ரத்து செய்தோடு, மற்றொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 5 பேருக்குப் பிணை வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்