கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பல்கலைக்கழக கல்லூரியில் ஹிஜாப் அணிவது தடைவிதிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நேற்று(பிப்பிரவரி 8), டெல்லி பல்கலைக்கழக வடக்கு வளாக கட்டடத்தின் முன் இஸ்லாமிய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிஜாப் அணிந்த பெண்கள் உட்பட 50 மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
“முஹம்மதுவின் மக்களாகிய நாங்கள் வெறுப்பு பரப்பப்படுவதற்கு எதிர்த்துப் போராடுவோம்”, “கர்நாடக மாணவர்களுடன் துணை நிற்போம்” போன்ற பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
‘பள்ளிகளில் ஹிஜாப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்கும் ம.பி., அரசு’ – கல்வித்துறை அமைச்சர் தகவல்
உடுப்பி, ஷிவமொக்கா, பாகல்கோட் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாபிற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.
உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஐந்து மாணவிகளுக்கு கல்லூரிக்குள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.