டெல்லி பல்கலைக்கழகத்தில் அடுத்தக் கல்வியாண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்றையதினம் நடைபெற்ற கல்வி சார் நிலைக்குழுக் கூட்டத்தில், நான்கு ஆண்டு இளநிலைப் படிப்புகள் மற்றும் பல்வேறு சேர்க்கை, 2022-23 கல்வியாண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேவேளையில், பெருமளவிலான ஆன்லைன் படிப்புகளுக்கான விவாதத்தை அந்தக்குழு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், நிலைக்குழுவின் இந்தப் பரிந்துரைமீதான விவாதம் இன்றைய தினம் [ஆகஸ்ட் 24] நடைபெற்றுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய டெல்லிப் பல்கலைக்கழகமானது 42 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்திருந்தது.
இந்நிலையில், உயர்மட்டக் குழுவானது மூன்றாண்டு இளநிலைப் படிப்பு தொடர்வதற்கும் ஆனால், அதில் நான்காண்டு படிப்பின் கட்டமைப்பை ஒருங்கிணைத்துக் கொள்ளவும். மேலும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு படிப்புகளில் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.
source: தி இந்து
தொடர்புடைய பதிவுகள்:
ஜே.என்.யூ மாணவர் தலைவர் உமர் காலித் மீதான வழக்குகள் புனையப்பட்டவை – வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.