Aran Sei

டெல்லி கலவர வழக்கு: உமர் காலித் பிணை மனுவை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்

Credit: The Hindu

டெல்லி கலவர வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தின் பிணை மனுவை டெல்லி நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கைவிலங்குடன் ஆஜர்ப்படுத்தப்பட்ட உமர் காலித் – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

அரசு தரப்பு மற்றும் உமர் காலித் தரப்பு வழக்கறிஞர்கள் அவர்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக சமர்பிக்க காலதாமதம் செய்தததாக கூறி, முன்று முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிணை மனு மீதான தீர்ப்பை கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் பிறப்பித்துள்ளார்.

உமர்காலித் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திரிதீப் பைஸ், “அமராவதி என்ற இடத்தில் உமர் காலித் பேசியதை திரித்து செய்தி ஊடகங்கள் வெளியிட்ட காணொளியின் அடிப்படையில் டெல்லி காவல்துறையினரால் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது” என வாதாடியுள்ளார்.

‘டெல்லி கலவர வழக்கில் காவல்துறையின் சாட்சியங்கள் அனைத்தும் புனையப்பட்டவை’ – உமர் காலித்

காலித் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என வாதிட்ட பைஸ், “காலித்திற்கு எதிரான தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை படிக்கும் போது, பேமிலி மேன் தொலைக்காட்சி தொடரின் கதையை படிப்பது போன்று உள்ளது” என தெரிவித்துள்ளார்.

கலவரங்களுக்கு காரணமாக இருந்த சாலை மறியல் போராட்டங்களுக்கு திட்டமிடுதல் உள்ளிட்ட பல ரகசிய கூட்டங்களில் உமர் காலித் பங்கேற்றார் என அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்பிபி பிரசாத் வாதிட்டுள்ளார்.

டெல்லி கலவர வழக்கில் தொடர்பிருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தேவாங்கனா கலிதா, நடாஷா நர்வால், உமர் காலித் உள்ளிட்ட 18 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

‘வாட்சப் குழுவில் இருந்ததற்காக டெல்லி கலவர வழக்கில் குற்றவாளியாக்குகிறது காவல்துறை’ – உமர் காலித் குற்றச்சாட்டு

வாட்சப் குழுக்களின் உறுப்பினராக இருந்தார் என உமர் காலித் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், வாட்சப் குழுவில் இருப்பது என்பது கூட்டு வன்முறையில் ஈடுபட்டதற்கு ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது என டெல்லி கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த வாரம் வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை அந்த குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்