Aran Sei

கவனக்குறைவாக தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை : அரசு தரப்பைக் கண்டித்த நீதிபதி

credits : the indian express

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்முறையாக வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், அந்தக் கலவரத்தின் போது ஜாஃப்ராபாத் பகுதியில் இருந்த பழக்கிடங்கை (Fruits Godown) சூறையாடியதாகவும் தீயிட்டு கொளுத்தியதாகவும் ஒசாமா, ஆதிர், குல்ஃபாம் ஆகிய நபர்கள் கடந்த ஏப்ரல் மாதம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி கலவரம் – சிறையில் தாக்கப்படும் முஸ்லீம் அரசியல் கைதிகள்

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்காக ஆஜராகிய வழக்கறிஞர் அப்துல் கஃப்பார், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள் தவறுதலாக கைது செய்யப்பட்டதாக கூறி ஜாமீன் அளிக்க கோரியுள்ளார். இவர்களுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது எனக் கடுமயாக எதிர்த்த அரசு தரப்பு வழக்கறிஞர் உத்தம் தத், அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி வாதிட்டுள்ளார்.

டெல்லி கலவரம் – சிறையில் தாக்கப்படும் முஸ்லீம் அரசியல் கைதிகள்

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி அமிதாப் ராவத் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபர்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முறையாக நடக்கவில்லை எனவும் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையும் கவனக்குறைவான முறையில் பதிவு செய்யப்பட்டுள்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்லி கலவரம் – கொலை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம்

இது தொடர்பாக நீதிபதி ”இந்த மனுக்களை விசாரிக்கும் போது, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை மிகவும் கவனக்குறைவுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது மிக தெளிவாக தெரிகிறது. இந்த வழக்கின் விசாரணையும் முறையாக நடத்தப்படவில்லை” என நீதிபதி அமிதாப் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம் – பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகள்

இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்திடம் சொல்லாமல் டெல்லியை விட்டு எங்கும் செல்லக்கூடாது எனும் நிபந்தனையின் அடிப்படையில்  அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்