Aran Sei

சிஏஏ வுக்கு எதிராக போராடியவர் மரணம்: சிசிடிவி வேலை செய்யவில்லை என காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை

டகிழக்கு  டெல்லியில் 2020 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடந்த கலவரம் தொடர்பாக இஸ்லாமியர் கைதுச் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டபோது, அந்தக் காவல்நிலையத்தில் ‘தொழில்நுட்ப கோளாறு’ காரணமாக சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறை தெரிவித்திருப்பதாக தி  வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

23 வயதான பைசான், உள்ளிட்ட சில இஸ்லாமிய இளைஞர்கள் சாலையில் காயமுற்று இருக்கும் நிலையில், தேசிய கீதத்தைப் பாடுமாறு வற்புறுத்தப்பட்ட காணொளி கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி சமூக வலைதளங்களில் வைரலானது.

பைசான் விடுதலை செய்யப்பட்ட பிப்ரவரி 26 ஆம் தேதி, உயிரிழந்ததற்கு, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக் காவல்துறை மருத்ததே காரணம் என அவரது தாயார் குற்றம்சாட்டியிருந்தார்.

தேர்தல் அறிக்கைகள் நடைமுறைக்கு சாத்தியமா? – தேர்தல் ஆணையம் ஆராய உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா முன்பு டெல்லி காவல்துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ”ஜோதி நகர் காவல்நிலையத்தில், ’தொழில்நுட்ப கோளாறு’ காரணமாக சிசிடிவி வேலை செய்யவில்லை. அதைத் திட்டமிட்டு பழுதாக்கியது போன்ற எந்த ஒரு ஆதாரமும் சிசிடிவியை பழுதுபார்க்க வந்தவர்கள் கண்டுபிடிக்கவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பைசான் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணை கோரி பைசானின் தாயார் கிஸ்மாதுன் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும் விதமாக காவல்துறை அந்தப் பிரமாணப் பத்தித்தை தாக்கல் செய்திருந்ததாக தி வயர்  கூறியுள்ளது.

கொரனோ தடுப்பூசி போட்டுகொள்வதற்கான வயதுவரம்பு தளர்வு – மத்திய அரசு அறிவிப்பு

”காயமுற்ற பைசான் ’சட்டவிரோத காவலில்’ அடைக்கப்பட்டிருந்தார். அவருக்குக் காவல்துறையால் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதால் உயிரிழந்தார்” என கிஸ்மதுன் அந்த மனுவில் குறிப்பித்திருந்தாத தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் இறப்பதுற்கு முன்பாக காவல்நிலையத்தில்  இருந்து விடுவிக்கப்பட்டதால், காவலில் வைத்துக் கொலை செய்யப்பட்டதற்கான தண்டனையில் இருந்து காவல்துறையினர் தப்பிக்க முடியாது என்றும், பைசானின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்