Aran Sei

டெல்லி கலவர வழக்கில் செயல்பாட்டாளர்களை காவல்துறையினர் தவறாக கையாண்டனர்  – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி. லோகுர் கண்டனம்.

Image Credits: News Click

டெல்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மாணவர்கள் செயல்பாட்டாளர்களான நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா, ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோரை கையாண்டதில், டெல்லி காவல்துறையினர், ”இயற்கை நீதி மற்றும் நியாயமான விசாரணைக்கான ஒவ்வொரு நியதியையும் மீறியுள்ளனர்.” என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது, கடந்த ஆண்டு மே 24 ஆம் தேதி காணொளி வாயிலாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே தேவங்கனா கலிதா கைது செய்யப்பட்டது ஆகியவை எல்லாம் இந்திய நீதித்துறை வரலாற்றில் கேள்விப்படாதவை என அவர் கூறியுள்ளார்.

அமிதாப் பச்சன் நடித்த ஷெஹன்ஷா (நீதிமன்ற அறைக்குள் வில்லன் ‘தற்செயலாக’ தூக்கிலிடப்பட்டு இறந்துவிடுவார்) படத்தை வேறு எங்கு இது போன்ற காட்சிகளை பார்த்ததில்லை என மதன் பி லோகுர் குறிப்பிட்டுள்ளார்.

மாடுகளை ஏற்றிச் சென்றதால் இஸ்லாமியர்கள் படுகொலை – நீதித்துறை விசாரணை வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

கடந்த ஆண்டு  மே 23 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தேவங்கனா, மே 24 ஆம் தேதி காணொளி வாயிலாக ஆஜராகி ஜாமீன் பெற்றார். சிறையில் கணினிகளை அணுக முடியாதபோது, 19 ஆயிர பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையின் நகல்களை பெண் டிரைவ்களில் அரசுத் தரப்பு எவ்வாறு வழங்கியது என குற்றம் சாட்டியுள்ளார்.

”தெளிவாகவும் வெளிப்படையாகவும், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர்களுக்கு எதிராக காவல்துறை செயல்பட்டுக் கொண்டே இருந்தது… அவர்கள் ஜாமீன் மனுவை ‘ஆயுதமேந்திய’ வழக்கிற்கு எதிராக, கிட்டத்தட்ட கைகளை பின்னால் கட்டிக்கொண்டு போராட வேண்டியிருந்தது” என மதன் பி லோகுர் தெரிவித்துள்ளார்.

‘விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறைகள்’ – விசாரணையை தொடங்கிய பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு

இந்திய அரசியலமைப்பின் கீழ் அமைதியான போராட்டம் என்பது பிரிவு 19 (1) (A) வீன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட உரிமை என்பதை லோகுர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி குற்றச்சாட்டப்பட்ட மூவருக்கும், குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டிய லோகுர், குற்றவியல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 207ன் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமை இது என கூறியுள்ளார்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விமானப்படை அதிகாரிக்கு நோட்டீஸ் – ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ள குஜராத் நீதிமன்றம்

சிறையில் கணினிகளை பயன்படுத்த வசதி இல்லாதபோது, மூவருக்கு குற்றப்பத்திரிக்கையின் நகல் ஏன் பென் டிரைவ்களில் வழங்கப்பட்டது. 19 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணத்தை எவராலும் கணினியில் படிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் சந்தேகத்திற்குரிய அனைவரும் கைது செய்யப்பட்டு அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்கும் வரை மூவரின் காவல் அவசியமாகிறது என வாதிடுவதன் மூலம், மூவரையும் காலவரையின்றி கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்பது காவல்துறையின் தந்திரோபயமாகிறது என நீதிபதி மதன் பி லோகுர் தெரிவித்துள்ளார்.

Source : The Telegraph

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்